இவர் அணியில் இணைவதால் இந்திய அணிக்கு பலம்.! மீண்டும் அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர்.!

- Advertisement -

இந்திய அணியின் முன்னணி இளம் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா கடந்த ஜூன் மாதம் அயர்லாந்து அணிக்கெதிரான போட்டியில் விளையாடும்போது காயமடைந்தார். இதனால் இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியவில்லை. இப்பொழுது முழுமையாக விரலில் ஏற்பட்ட முறிவு சரியான காரணத்தினால் அவர் இங்கிலாந்து அணிக்கெதிரான 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். என்று கூறப்படுகிறது.

bumrah 1

- Advertisement -

காயத்திலிருந்து மீண்ட பும்ரா சில நாட்களாக வலைப்பயிற்சிலும் கலந்து கொண்டார். இவரின் வருகை சற்று பலவீனமாக இருக்கும் இந்திய அணிக்கு கூடுதல் பலம் அளிக்கும் என்று நம்பலாம். மேலும் இங்கிலாந்து போன்ற வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்து அணி 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆலோசகர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி வீரர்கள் தொடர்ந்து காயமடைந்து வருவது மேலும் இந்திய அணியை இக்கட்டான சூழலுக்கு தள்ளுகிறது. குறிப்பாக 2வது டெஸ்ட் போட்டியில் கோலி அஸ்வின் மற்றும் பாண்டியா ஆகியோர் காயமடைந்தனர். அஸ்வின் மற்றும் பாண்டியா காயத்திலிருந்து மீண்டதால் அடுத்த போட்டியில் ஆடுவார்கள். விராட் கோலி விளையாடுவரா என்பது உறுதியாக தெரியவில்லை.

bumrah 2

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் 18ஆம் தேதி நாட்டிங்ஹம் நகரில் தொடங்குகிறது. இந்தப்போட்டியில் பும்ரா விளையாடுவர் என்று நம்பப்படுகிறது. மேலும் அவருடன் இஷாந்த் ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் விளையாடுவார்கள் எண்டு கூறப்படுகிறது. கடும் விமர்சனத்துக்கு ஆளான இந்திய அணி மீண்டும் வெற்றிகரமாக திரும்புமா என்று கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து கார்த்திருக்கிறது.

Advertisement