ஆட்டத்தை எந்நேரத்திலும் மாற்றும் இந்த பவுலர் தான் இந்திய அணியின் வரம் – பும்ரா புகழாரம்

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டி ஆரம்பித்த நாளிலிருந்தே மழை மழை பெரிய சிக்கலாக இருந்துவருகிறது. முதல் நாள் முழுவதும் ஆட்டம் தடைபட்ட வேலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களிலும் போதிய வெளிச்சம் இன்மை காரணமாக இந்த போட்டியானது பாதிக்கப்பட்டு வருகிறது.

WTC

- Advertisement -

இந்நிலையில் தற்போது நான்காவது நாளான இன்றும் மழை பெய்து வருவதால் போட்டி இதுவரை ஆரம்பிக்காமல் இருக்கிறது. இப்படியே சென்றால் போட்டி ரிசர்வ் டே ஆன ஆறாவது நாளும் போட்டி நடந்தாலும் இரு அணிகளும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடியவே அதிக வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக ரசிகர்கள் தற்போது வருத்தத்தில் உள்ளனர். இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி 217 ரன்கள் குவித்தது.

அதனை தொடர்ந்து தற்போது விளையாடி வரும் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்களை எடுத்துள்ளது. தற்போது இந்த போட்டி குறித்த கருத்துகளை அணியில் உள்ள வீரர்கள் சிலர் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா இந்த போட்டியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் குறித்து மிகவும் பாராட்டி உள்ளார். அவர் அஸ்வின் குறித்து பேசுகையில் :

ashwin 1

அஷ்வின் ஒரு மிகச்சிறந்த வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் போன்று ஒரு வீரரின் ரெக்கார்டை எடுத்துப் பார்த்தால் உங்களுக்கு அது நன்றாக புரியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் 400 விக்கெட் வீழ்த்துவது சாதாரணம் கிடையாது. உண்மையில் அவர் இந்திய அணிக்கு கிடைத்த ஒரு மதிப்பான வீரர் என்று பும்ரா கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இந்த போட்டியில் கூட முதல் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கையே மாற்றி காண்பித்துள்ளார்.

Ashwin

இனிவரும் போட்டிகளிலும் இந்திய அணிக்காக அவர் நிச்சயம் சிறப்பாகவே செயல்படுவார் என தான் நம்புவதாக ஜஸ்பிரித் பும்ரா ரவிசந்திரன் அஸ்வின் குறித்து புகழ்ந்து கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் அஸ்வின் நிச்சயம் இன்னும் சில ஆண்டுகளில் இன்னும் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்தி பல்வேறு சாதனைகளை படைப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

Advertisement