- Advertisement -
ஐ.பி.எல்

ஐ.பி.எல் தொடரின் ஆரம்ப கட்ட போட்டிகளை தவறவிட இருக்கும் ஜஸ்ப்ரீத் பும்ரா.. காரணம் என்ன? – வெளியான தகவல்

எதிர்வரும் 2025-ஆம் ஆண்டிற்கான 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோத இருக்கின்றனர்.

ஐ.பி.எல் போட்டிகளை தவறவிட இருக்கும் பும்ரா :

மொத்தம் பத்து அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரானது இன்னும் சில வாரங்களில் துவங்கவுள்ள வேளையில் தற்போது இங்கு தொடரின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியான ஒரு அறிக்கையின்படி மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.

- Advertisement -

ஏனெனில் அண்மையில் ஆஸ்திரேலியன் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்த இந்திய டெஸ்ட் அணியில் பும்ரா இடம்பிடித்து விளையாடி இருந்தார். அந்த தொடரின் முதல் நான்கு போட்டியில் விளையாடிய அவர் ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக முதல் இன்னிங்ஸ்சின் பாதியிலேயே பந்து வீசாமல் வெளியேறியிருந்தார்.

அதனை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ்க்கு அவர் பந்துவீச வரவில்லை. பின்னர் அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு சற்று தீவிரமடைந்ததால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பெறவில்லை.

- Advertisement -

இந்நிலையில் மீண்டும் ஐபிஎல் தொடரின் போது கிரிக்கெட் களத்திற்கு திரும்பவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ஏப்ரல் முதல் வாரம் வரை மீண்டும் மைதானத்திற்கு திரும்ப வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐபிஎல் தொடரின் ஆரம்பகட்ட போட்டிகளை அவர் தவறவிட உள்ளார்.

இதையும் படிங்க : பயிற்சியின் போது விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம்.. பைனல் மேட்ச்சில் பங்கேற்பாரா? – விவரம் இதோ

அதேபோன்று ஜூன் மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளதால் அதனை கருத்தில் கொண்டும் அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டும் குறிப்பிட்ட சில போட்டிகளிலேயே மட்டுமே அவர் பங்கேற்று விளையாடுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -