பயிற்சியின் போது விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம்.. பைனல் மேட்ச்சில் பங்கேற்பாரா? – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி நாளை மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான இரு அணி வீரர்களும் தற்போது ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இறுதிப்போட்டியில் விராட் கோலி பங்கேற்பாரா? :

ஏற்கனவே கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணியானது அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் சேர்த்து கைப்பற்றும் முனைப்புடன் தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. அதே போன்று இந்திய அணியை வீழ்த்தி தாங்களும் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் நியூசிலாந்து அணி தயாராகி வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த இறுதிப் போட்டியானது அனைவரது மத்தியிலும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. கடந்த 2013-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணி தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த கோப்பையை வெல்வதற்காக தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகிறது.

இந்த தொடரின் லீக் சுற்று போட்டிகளில் இருந்து தோல்வியை சந்திக்காமல் பயணித்து வரும் இந்திய அணியானது இறுதிப் போட்டியிலும் நியூசிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐசிசி அகாடமியில் பயிற்சி பெற்று வரும் இந்திய வீரர்களின் மத்தியில் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலிக்கு முட்டி பகுதியில் பந்து பட்டு காயம் ஏற்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாக்கியுள்ளன.

- Advertisement -

மேலும் பந்து பட்டவுடன் மைதானத்தில் இருந்து வெளியேறிய கோலி பயிற்சியையும் உடனடியாக நிறுத்தியதாகவும் அதன் பின்னர் முதலுதவி சிகிச்சை பெற்ற பின்னர் மற்ற வீரர்கள் பயிற்சி செய்வதை பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் பந்து பட்ட இடத்தில் பேண்டேஜ் போடப்பட்டுள்ளதால் அவர் நாளை போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகமும் இருந்தது.

இதையும் படிங்க : அக்சர் படேல் நல்லாத்தான் ஆடுறாரு.. ஆனாலும் கே.எல் ராகுலுக்கு அந்த வாய்ப்பை தாங்க – அணில் கும்ப்ளே ஆதரவு

இந்நிலையில் விராட் கோலிக்கு ஏற்பட்ட காயம் குறித்து பேசியுள்ள கண்காணிப்பாளர்கள் கூறுகையில் : விராட் கோலிக்கு லேசான வலி தான் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் முன்னெச்சரிக்கை காரணமாகத்தான் அவர் பயிற்சியை நிறுத்தி இருக்கிறார். அவருடைய காயம் தீவிரமானது கிடையாது எனவே நிச்சயம் விராட் கோலி நாளைய இறுதி போட்டியில் விளையாடுவார் என்று தெரிவித்துள்ளனர்.

Advertisement