
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த சில ஆண்டுகளாகவே காயம் காரணமாகவும், பணிச்சுமை காரணமாகவும் முக்கிய தொடர்களில் மட்டுமே பங்கேற்று விளையாடி வருகிறார். அதனை தவிர்த்து சாதாரண தொடர்களில் ஓய்வெடுத்துக் கொள்கிறார். பும்ராவின் காயத்தை கருத்தில் கொண்ட இந்திய அணியின் நிர்வாகமும் தேவைப்படும்போது அவருக்கு ஓய்வினை வழங்கி மாற்று வீரர்களை விளையாட வைத்து வருகிறது.
அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் விளையாடிய பும்ரா பணிச்சுமை காரணமாக அந்த தொடரின் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்தார். இதனால் எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் அவர் விளையாடுவாரா? என்ற கேள்வியும் எழுந்தது.
ஏனெனில் இங்கிலாந்து தொடரிலேயே அவரது பணிச்சுமை காரணமாக முழு தொடரையும் விளையாட முடியாமல் இரண்டு போட்டிகளில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதால் அவரால் எதிர்வரும் இந்த ஆசிய கோப்பை தொடரில் முழுவதுமாக விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் பும்ரா தேர்வு செய்யப்பட மாட்டார் என்றும் அவருக்கு முழு கொடுக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் அடுத்த ஆண்டு டி20 உலக கோப்பை தொடரானது வரும் வேளையில் அதற்கு முன்னதாக பும்ரா போதிய ஓய்வில் இருந்தால்தான் அவரால் அந்த உலகக் கோப்பை தொடரில் முழுவதும் பங்கேற்க முடியும்.
அதனால் இனிவரும் முக்கிய டி20 தொடர்களில் மட்டுமே அவர் விளையாடுவார் என்றும் அதற்கு முன்னதாக நடைபெறும் தொடர்களில் மற்ற வீரர்களே விளையாடுவார்கள் என்றும் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட அளவிலான போட்டியிலே பும்ரா விளையாட இருக்கிறார்.
இதையும் படிங்க : கவுதம் கம்பீரால் உடைந்து போன ஹார்டிக் பாண்டியாவின் கனவு.. இனி வாய்ப்பில்லையாம் – விவரம் இதோ
கடந்த 2024 டி20 உலக கோப்பை தொடரில் விளையாடியிருந்த அவர் அதற்கு பின்னர் இந்திய அணி சார்பாக எந்தவொரு டி20 தொடரிலும் பங்கேற்கவில்லை. நேரடியாக அடுத்த 2026 டி20 உலக கோப்பை வரும்போது தான் முன்னணி வீரராக அணியில் இணைவார் என்று தெரிகிறது. அவர் இல்லையென்றாலும் இந்திய அணியின் பந்துவீச்சு பலமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.