IND vs IRE : அயர்லாந்து அணிக்கெதிரான நாளைய போட்டியில் கேப்டன் பும்ராவிற்கு ஓய்வு – புதிய கேப்டன் யார் தெரியுமா?

Bumrah
- Advertisement -

அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரினை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளதால் நாளைய மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ராவிற்கு ஓய்வு கொடுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

IND-vs-IRE

- Advertisement -

ஏனெனில் காயத்திற்கு பிறகு தற்போது இந்திய அணிக்கு திரும்பியுள்ள பும்ரா முதல் இரண்டு போட்டிகளிலும் தனது அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதோடு முதல் இரண்டு போட்டிகளிலும் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் 4.87 என்கிற எக்கனாமியில் பந்துவீசி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் 50 ஓவர் உலககோப்பை தொடர்களில் அவர் முக்கிய வீரராக இடம் பெற்றுள்ளதால் அவருக்கு இந்த மூன்றாவது போட்டியில் ஓய்வளிக்கப்படும் என்று தெரிகிறது.

Bumrah

ஏனெனில் குறிய இடைவேளையில் அடுத்தடுத்து போட்டிகளில் விளையாடுவது அவரது உடற்தகுதியை பாதிக்கலாம் என்பதற்காக அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணியை நாளைய மூன்றாவது டி20 போட்டியில் துவக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டே வழிநடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் சீனாவில் நடைபெறவுள்ள ஏசியன் கேம்ஸ் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக அவரே நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2023 : சுமாரான கேஎல் ராகுல் விளையாடியே ஆகணும்னு கட்டாயமா? அவர ஏன் செலக்ட் பண்ணல – மதன் லால் விமர்சனம

எனவே சோதனை முன்னோட்டமாக இந்த போட்டியில் ருதுராஜிக்கு கேப்டன்ஷிப் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. கட்டாயம் இந்த மாற்றம் நாளைய போட்டியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முதல் முறையாக ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement