ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதை விட பும்ரா செய்த சிறப்பான உலக சாதனை என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Bumrah-1
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது போட்டி ஜமைக்காவில் கடந்த 30 ஆம் தேதி துவங்கியது.

Bumrah

- Advertisement -

ந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக விகாரி 111 ரன்களை எடுத்தார். இஷாந்த் ஷர்மா 57 ரன்களை எடுத்தார். அதன் பிறகு முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா சார்பாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இந்த போட்டியில் உலக சாதனை ஒன்றை படைத்தார். அதாவது பிராவோ, புரூக்ஸ் மற்றும் சேஸ் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சாதனை படைத்தார். இந்தியா சார்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுக்கும் மூன்றாவது வீரர் என்ற பெருமையை பும்ரா பெற்றார்.

bumrah

இவர் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தாலும் அந்த சாதனையை விட தனிச்சிறப்பான சாதனை ஒன்று உள்ளது. அது யாதெனில் வெளிநாட்டு மைதானங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதன் முறை ஹாட்ரிக் அடித்த இந்திய பவுலர் என்ற மிகப் பெரும் சாதனையை பும்ரா இந்த போட்டியில் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement