பும்ராவின் காயத்தால் அவருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து என்ன தெரியுமா ? – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இன்று கிரிக்கெட்டில் உலகின் மிக அச்சுறுத்தும் பவுலர்களில் ஒருவராக திகழ்பவர் தான் இந்திய அணியின் வீரரான பும்ரா. அவரது பந்துகளை ஆடுவதில் பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. ஏனெனில் அவரது பந்துவீசும் ஸ்டைல் மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு உள்ளதால் அவரை கணிக்க முடியாமல் பலரும் தங்களது விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர்.

Bumrah-1

- Advertisement -

ஆனால் தற்போது காயமடைந்துள்ள பும்ரா தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியவில்லை மேலும் அவரது காயத்தால் பௌலிங் ஆக்சன் மாறுபடும் என்றும் தெரிகிறது. அவ்வாறு அவரது பௌலிங் ஆக்சன் மாறினால் அவரது பந்துவீச்சு தனித்துவம் குறைந்துவிடும். மேலும் அவரால் முன்பை போல வழக்கமாக சிறப்பாக பந்து வீச முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏனெனில் இதற்கு முன்பாக இங்கிலாந்து அணியை சேர்ந்த பிளிண்டாப் இது போன்று காயம் அடைந்த சமயத்தில் அவரது பௌலிங் ஆக்சனை மாற்றினார். அதனால் அவரது வேகம் குறைந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உடற்பயிற்சியாளர் ஒருவர் கூறும்போது : இப்போது பும்ரா அவருடைய கரியரின் உச்சத்தில் இருக்கிறார். இப்போது அவரது பௌலிங் ஆக்சன் இல் மாற்றம் ஏற்படுமாயின் அவரது வெற்றியை அது குறைக்க செய்யும்.

Bumrah

ஏனெனில் பௌலிங் ஆக்சன் மாறும்போது லைன் மற்றும் லென்த் மாறுபடும். எனவே அவரால் சிறப்பாக பந்து வீச முடியாது. அவருடைய பந்துவீச்சு அவருடைய கட்டுப்பாட்டை இழக்கும் எனவே அவர் உலகின் நம்பர் ஒன் வீரர் இடத்தையும் அவர் இழக்க நேரிடும் என்று அவர் கூறினார். மேலும் சரியான சிகிச்சை பெற்று முறையான பயிற்சியை மேற்கொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்தால் மட்டுமே அவரால் இந்த காயத்திலிருந்து மீண்டு சாதிக்க முடியும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement