7 மாசமா ஒரு மேட்ச் கூட ஆடல. ஆனா டெஸ்ட் தரவரிசையில் பும்ரா பிடித்திருக்கும் இடம் – என்ன தெரியுமா?

Bumrah
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி அப்போது நடைபெற்ற முடியும் கிரிக்கெட் தொடர்களின் இடையில் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று இந்தூரில் துவங்கிய வேளையில் இன்று கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

Ashwin

- Advertisement -

அதில் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்திருந்த வேளையில் தற்போது ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி தமிழக வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இடத்தில் பிடித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே எடுத்த ஆண்டர்சன் தற்போது தரவரிசை பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டியிலும் அற்புதமாக செயல்பட்ட தமிழக வீரர் அஸ்வின் முதல் இடத்தை பிடித்துள்ளார். அதேபோன்று நம்பர் ஒன் ஆல்ரவுண்டருக்கான இடத்தை ரவீந்திர ஜடேஜா பிடித்துள்ளார்.

bumrah 3

இதில் ஆச்சரியப்பட வைக்கும் விவரம் யாதெனில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான பும்ரா மற்றும் பாகிஸ்தான் வீரர் ஷாகின் அப்ரிடி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சமீபத்தில் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தாலும் அவர்கள் இருவரும் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர்.

- Advertisement -

குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளரான பும்ரா கடந்த ஜூலை மாதத்திற்கு பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக இதுவரை 7 மாதத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட விளையாடவில்லை. ஆனால் அவர் தற்போது நான்காவது இடத்தை பிடித்துள்ளார். அதேபோன்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : 3வது போட்டி துவங்கியதும் ஐசிசி தரவரிசையில் உலக சாதனை படைத்த அஷ்வின் – இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை

இதற்கு காரணம் யாதெனில் : நான்காவது இடத்தில் இருந்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஒல்லி ராபின்சன் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சோபிக்க தவறியதால் அவர் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதன்காரணமாக தற்போது அவருக்கு முன்னதாக பும்ரா மற்றும் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் 4-ஆவது மற்றும் 5-ஆவது இடத்தினை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement