- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் 6 ஆவது இந்திய வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு பின்னர் இந்திய அணி விளையாடிய எந்த போட்டியிலும் விளையாடாமல் ஓய்வில் இருந்தார். பணிச்சுமை காரணமாக அவருக்கு இந்த ஓய்வை அளித்திருந்த இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மீண்டும் தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கியது.

சாதனை நிகழ்த்திய ஜஸ்ப்ரீத் பும்ரா :

அதன்படி 82 நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இணைந்த ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடி வருகிறார். என்னதான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் சர்வதேச களத்திற்கு திரும்பி இருந்தாலும் கம்பேக் கொடுத்த முதல் போட்டியிலேயே அற்புதமான பந்துவீச்சை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்தவகையில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய பும்ரா 11ஓவர்கள் மட்டுமே வீசி ஒரு மெயிடன் உட்பட 50 ரன்கள் விட்டு கொடுத்து நான்கு முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்திய அணி சார்பாக இந்த முதல் இன்னிங்ஸில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராகவும் திகழ்ந்தார். இந்த போட்டியில் அவர் எடுத்த நான்கு விக்கெட்டுகள் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் வங்கதேச அணிக்கு எதிரான இந்த நான்கு விக்கெட்டுகளுடன் சேர்த்து அவர் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து இந்திய அணிக்காக 400 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

- Advertisement -

அவரது இந்த சாதனைக்கு தற்போது பலரது மத்தியில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. அதோடு ஒட்டுமொத்தமாக சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 400 விக்கெடுகளை வீழ்த்திய 6-வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னதாக கபில் தேவ், ஜாகிர் கான், ஸ்ரீநாத், முகமது ஷமி, இஷாந்த் சர்மா ஆகியோர் இந்திய அணிக்காக 400 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர்.

இதையும் படிங்க : 227 ரன்கள் முன்னிலை பெற்றும் பாலோஆன் வழங்காத இந்திய அணியின் ரோஹித் சர்மா – ஏன் தெரியுமா?

தற்போது அவர்களது பட்டியலில் ஆறாவது வீரராக பும்ரா இடம் பிடித்துள்ளார். அது தவிர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்திய வீரர் என்ற பட்டியலில் அஸ்வின், கபில் தேவ், முகமது ஷமி, கும்ப்ளே ஆகியோருக்கு அடுத்து ஐந்தாவது இடத்தை பும்ரா பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -