227 ரன்கள் முன்னிலை பெற்றும் பாலோஆன் வழங்காத இந்திய அணியின் ரோஹித் சர்மா – ஏன் தெரியுமா?

Rohit
- Advertisement -

சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியில் முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியரது சிறப்பான ஆட்டம் காரணமாக 376 ரன்கள் குவித்து அசத்தியது.

பாலோஆன் வழங்காதது ஏன்? :

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஷ்வின் 113 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 86 ரன்களையும் குவித்து அசத்தினர். அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய பங்களாதேஷ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 149 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நான்கு விக்கெட்டுகளையும், சிராஜ், ஆகாஷ் தீப் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

இதன் காரணமாக இந்திய அணி வங்கதேச அணியை விட 227 ரன்கள் முன்னிலை பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடர்ந்து விளையாடி வரும் இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் மூன்று விக்க்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் குவித்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இந்திய அணி 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள வேளையில் நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் 227 ரன்கள் முன்னிலை பெற்று அணியின் கேப்டன் ரோகித் சர்மா பாலோஆன் கொடுக்காதது ஏன் என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்தது.

இதையும் படிங்க : சேப்பாக்கத்தில் இப்படி நடப்பது இதுவே முதல்முறை.. போட்டியின் இரண்டாம் நாள் அன்று நடைபெற்ற சம்பவம்

இருப்பினும் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்சில் சரியாக விளையாடாததால் அவர்களுக்கு போதிய பேட்டிங் பயிற்சி நேரம் வேண்டும் என்பதற்காகவே தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். மேலும் போட்டியின் கடைசி இன்னிங்க்சை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது கடினம் என்பதாலும் அவர் பாலோஆன் கொடுக்காமல் தொடர்ச்சியாக இந்திய அணி விளையாடும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement