ஆசியா கண்டத்திலே பும்ரா ஒருவர் மட்டும் தான் இந்த சாதனையை செய்து உள்ளார் – என்ன சாதனை தெரியுமா ?

Bumrah
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஒரு வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

bumrah

- Advertisement -

இந்த போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சிறப்பாக பந்து வீசிய பும்ரா இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து ஏழு விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். அதிலும் குறிப்பாக இரண்டாவது இன்னிங்சில் 8 ஓவர் வீசிய பும்ரா 3 மெய்டன் ஓவர்கள் வீசி 7 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இமாலய சாதனையை பும்ரா படைத்துள்ளார். அதாவது ஆசிய கண்டத்திலேயே ஒரு வேகப்பந்து வீச்சாளர் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட்இண்டீஸ் போன்ற அணிகளுக்கு எதிராக அவர்களது மண்ணில் வெளிநாட்டு தொடர்களில் 5 விக்கெட்டுகள் எடுத்த ஒரே வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தினார்.

Bumrah-1

தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வரும் பும்ரா டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முக்கிய வீரராக இருப்பார் என்று ஏற்கனவே விராட் கோலி அவர் குறித்து புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 55 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். மேலும் வேகமாக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement