- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இஷாந்த் சர்மாவின் மகத்தான சாதனையை முறியடிக்க பும்ராவுக்கு வாய்ப்பு – விவரம் இதோ

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ள உள்ளதால் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணிக்கு இந்த தொடரானது மிகவும் சவால் வாய்ந்த தொடராக மாறியுள்ளது. அதேவேளையில் இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் போன்ற அனுபவ வீரர்கள் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் இந்த தொடரில் இளம் வீரர்கள் மட்டுமே பங்கேற்க இருக்கின்றனர்.

இஷாந்த் சர்மாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பும்ரா :

இதன் காரணமாக அவர்களது செயல்பாடு இந்த தொடரில் எவ்வாறு அமையப்போகிறது? என்பது குறித்து எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரானது புதிய கேப்டனான சுப்மன் கில்லுக்கு ஒரு அக்னி பரீட்சை என்றும் பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் கேப்டன்சியில் பெரிய அனுபவம் இல்லாத அவர் வெளிநாட்டு மண்ணில் கேப்டனாக முதல் டெஸ்ட் தொடரை எதிர்கொள்ள இருக்கிறார்.

- Advertisement -

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றிபெற வேண்டுமெனில் பந்துவீச்சாளர்கள் அதிகளவு கைகொடுக்க வேண்டும் என்றும் அதிலும் குறிப்பாக பும்ராவின் சிறப்பான செயல்பாடு இருந்தால் மட்டுமே இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று பலரும் பேசி வருகின்றனர். ஆனால் ஏற்கனவே பணிச்சுமை காரணமாக இந்த இங்கிலாந்து தொடரின் மூன்று போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் எப்படியாவது ஐந்து போட்டிகளிலும் விளையாட வேண்டும் என்ற உத்வேகத்துடன் தற்போது பும்ரா தயாராகி வருகிறார். இந்நிலையில் இந்த இங்கிலாந்து தொடரில் விளையாட தயாராகி வரும் பும்ரா அனுபவ வீரரான இஷாந்த் சர்மாவின் முக்கிய சாதனை ஒன்றிணையும் முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்த காத்திருக்கும் சாதனை யாதெனில் :

- Advertisement -

இதுவரை இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய பவுலராக இஷாந்த் சர்மாவே முதலிடத்தில் இருக்கிறார். இங்கிலாந்து மண்ணில் இதுவரை அவர் 51 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் கபில்தேவ் 43 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்திலும், முகமது ஷமி 42 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்திலும், ஜஸ்ப்ரீத் பும்ரா 37 விக்கெட்டுகளுடன் நான்கு இடத்திலும் இருக்கின்றனர்.

இதையும் படிங்க : ஆஷஸ்’க்கு அடி வாங்க வந்துள்ள இந்தியாவை.. 2 வகையா இங்கிலாந்து தோற்கடிக்கும்.. கிரேம் ஸ்வான் கணிப்பு

இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடரில் மூன்று ஆட்டங்களில் அவர் விளையாடினாலும் 15 விக்கெட்டுகளை வீழ்த்தும் பட்சத்தில் இஷாந்த் சர்மாவை தாண்டி 52 விக்கெட்டுகளை வீழ்த்துவார். இதன்மூலம் இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -