இந்திய அணி சார்பாக டி20 வரலாற்றில் மெகா சாதனையை நிகழ்த்திய பும்ரா – விவரம் இதோ

Bumrah
- Advertisement -

இந்தியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற முக்கியமான லீக் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது. இந்த போட்டியில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்புடன் வைக்க முடியும் என்கிற காரணத்தினால் நேற்றைய போட்டியில் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

indvssco

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஸ்காட்லாந்து அணியை 85 ரன்களில் சுருட்டிய இந்திய அணி ஆனது 6.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 89 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி20 கிரிக்கெட்டில் ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அந்த சாதனை யாதெனில் 2016ஆம் ஆண்டு முதல் டி20 கிரிக்கெட் விளையாடி வரும் அவர் 54 போட்டிகளில் இதுவரை 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். நேற்றைய போட்டியில் 3.4 ஓவர்கள் வீசிய அவர் 10 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு அறிமுகமாகி தற்போது வரை விளையாடி வரும் சாஹல் 49 போட்டிகளில் 63 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

bumrah 1

இதுவே இந்திய அணி வீரர் ஒருவர் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையாக இருந்தது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் 54 போட்டிகளில் 64 விக்கெட்டுகள் வீழத்தி தற்போது இந்திய அணி சார்பாக அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதுவரை இந்திய அணிக்காக 64 விக்கெட்டுகளை வீழ்த்தி பும்ரா முதல் இடத்திலும், இரண்டாவது இடத்தில் சாஹல் 63 விக்கெட்டுகள், மூன்றாவது இடத்தில் அஷ்வின் 55 விக்கெட்டுகளுடன் அடுத்தடுத்த இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement