பண்டை தொடர்ந்து மனைவியுடன் புட்பால் மேட்ச் பார்க்க சென்று கையும் களவுமாக சிக்கிய இந்திய வீரர் – புகைப்படம் இதோ

bumrah

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட மிகப்பெரிய தொடரில் பங்கேற்க இந்திய அணி ஜூன் மாதம் இங்கிலாந்து சென்றடைந்தது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருந்ததன் காரணமாக இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்னர் சுமார் இரண்டு வாரங்கள் மும்பையில் தனியார் ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

IND

அதன் பிறகு இரண்டு கட்ட பரிசோதனைக்கு பிறகு இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். பின்னர் இங்கிலாந்து சென்றதும் ஒரு வாரம் குவாரன்டைனில் இருந்த இந்திய வீரர்கள் அதன் பின்னரே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடினார். இப்படி இருக்க தற்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னர் ஒரு மாத காலம் ஓய்வு இருப்பதால் இந்திய வீரர்கள் அனைவரும் இரண்டாவது தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்டு சுற்றுலா சென்றுள்ளனர்.

- Advertisement -

இப்படி பயோ பபுளில் இருந்து வெளியேறி வெளியே சென்று திரும்பிய இரண்டு வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த செய்தியை தான் இன்று காலையில் இருந்தே நாம் அதிகம் பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி இது குறித்த தகவல்கள் தான் வெளியாகி வருகிறது.

pant 2

அப்படி கொரோனா வைரஸ் பாசிட்டிவான வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்ட் யூரோ கோப்பை கால்பந்து போட்டியை ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தாலேயே அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் கோலியின் எச்சரிக்கையையும் மீறி அவர் இவ்வாறு நடந்து கொண்டார் என்ற தகவலும் வெளியாகின.

- Advertisement -

sanjana

இந்நிலையில் அதே யூரோ கோப்பை கால்பந்து போட்டிக்கு இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா அவரது மனைவியான சஞ்சனா கணேசனுடன் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது. இதன் காரணமாக பண்டை தொடர்ந்து பும்ரா மற்றும் அவரது மனைவிக்கும் தொற்று பரவும் அபாயம் ஏற்படுமோ என்ற அச்சம் உண்டாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement