CSK vs MI : என்னுடைய இந்த மனநிலையே எனது சிறப்பான பந்துவீச்சுக்கு காரணம் – பும்ரா

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித்

bumrah
- Advertisement -

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.

Dhoni

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா. அதன்படி முதலில் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பொல்லார்ட் 25 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். சென்னை அணியின் சார்பாக தீபக் சாகர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 148 ரன்கள் மட்டுமே குவித்தது. இதனால் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. சென்னை அணி சார்பாக வாட்சன் 80 ரன்களைக் குவித்தார். பும்ரா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

Watson

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் பும்ரா கூறியதாவது : இந்த வெற்றி கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த இறுதிப் போட்டியில் நாங்கள் கடைசிவரை அழுத்தத்தைக் கொடுத்து வெற்றி பெறுவோம் என்று நம்பினேன் வெற்றிக்கு பிறகு இந்த உணர்வு மிகவும் சிறப்பானதாகும். இன்று எனது பவுலிங் சிறப்பாக இருந்தது மேலும் நான் இன்று மிகவும் பொறுமையாக இருந்தேன்.

Bumrah

கடைசிவரை எதைப்பற்றியும் நினைத்து பதட்டப்படாமல் பந்து வீசினேன். அதனால் எனது பந்துவீச்சு சிறப்பாக அமைந்தது மட்டுமின்றி அது அணியின் வெற்றிக்கு உதவியது. இன்றைய நாளில் நான் பந்தை எடுக்கும்போது அழுத்தத்தை பேட்ஸ்மேன்கள் மீது வைக்க வேண்டும் என்று நினைத்து பந்து வீசினேன் என்று பும்ரா கூறினார். ஆட்டநாயகன் விருது பெற்ற அவருக்கு ஐந்து லட்ச ரூபாய் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement