தோணியை ஏமாற்றிய பிரபல கட்டட நிறுவனம்…இத்தனை கோடியா ?…தோணி போட்ட அதிரடி வழக்கு !

dhoni

தற்போது 11வது ஐபிஎல் சீசனில் படுபிசியாக வலம் வருகின்றார் சென்னை அணியின் கேப்டன் தோனி.இவர் தற்போது முன்னனி ரியல்எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் மீது 150கோடி ரூபாய் தரக்கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.மிகப்பெரிய ரியல்எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்று அமரப்பள்ளி குரூப் ஆப் கம்பெனிஸ். மிகப்பிரண்டமாக வளர்ந்து வந்த நிறுவனம் தற்போது நஷ்டத்தில் திணறி வருகின்றது.
dhoni

மிகப்பெரும் நிதி நெருக்கடியில் சிக்கி வரும் இந்நிறுவனம் தற்போது வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்த தேதியில் வீடுகளை கட்டிக்கொடுக்க முடியாமல் முழித்துவருகின்றது.அமரப்பள்ளி நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடரக தோனியை ஒப்பந்தம் செய்தது அந்நிறுவனம். ஒப்பந்தத்தின் படி தோனிக்கு 150கோடி ரூபாயை அமரப்பள்ளி வழங்கவேண்டிய தொகை நிலுவையில் உள்ளது.

தற்போது அமரப்பள்ளி நிறுவனம் தோனிக்கு வழங்கப்படவேண்டிய 150கோடி ரூபாயை வழங்கக்கோரி ரிதி ஸ்போர்ட்ஸ் என்கிற நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்துள்ளது.இந்த வழக்கில் அமரப்பள்ளி நிறுவனம் தோனிக்கு 200கோடி ரூபாய் வழங்கிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

- Advertisement -

amrapali

சுமார் ஏழாண்டுகள் வரையிலும் அமரப்பள்ளி நிறுவனத்திற்கு பிராண்ட் அம்பாசிடரக இருந்த தோனி கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து விலகினார்.கடந்த 2016ம் ஆண்டில் 9 கோடி ரூபாய் வில்லா நொய்டாவில் இருக்கும் அமரப்பள்ளி டிரீம் வேலிதிட்டத்தில் டோனிக்கு 1 கோடி ரூபாய் விலையுள்ள வில்லா ஒன்றை அமரப்பள்ளி நிறுவனம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement