MS Dhoni : தோனி மைதானத்திற்குள் வந்து வாக்குவாதம் செய்யவில்லை. இதையே கேட்டார் – நடுவர் விளக்கம்

நேற்று நடந்த ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நோபால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து. அதிலும் குறிப்பாக மைதானத்திற்குள் நுழைந்து அம்பயருடன் நேரடி வாக்குவாதத்தில்

Dhoni
- Advertisement -

நேற்று நடந்த ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் நோபால் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து. அதிலும் குறிப்பாக மைதானத்திற்குள் நுழைந்து அம்பயருடன் நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனியின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால் தோனிக்கு போட்டி ஊதியத்திலிருந்து 50% அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

Dhoni-2

- Advertisement -

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் தோனியின் இந்த செயலை விமர்சிக்கும் விதமாக முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஆனால், இந்த நிகழ்வில் என்ன நடந்தது என்று நடுவர் ப்ருஸ் அக்ஸன்போர்ட் தற்போது பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது :

நான் நோபால் அறிவிக்காததால் விரக்தி அடைந்த தோனி சற்று கோபத்துடன் மைதானத்திற்குள் வந்தது உண்மைதான். ஆனால், தோனி எங்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. ஏன் இந்த பந்து நோபால் கொடுக்கப்படவில்லை ? அதற்கான சரியான காரணத்தை மட்டும் கூறுங்கள் என்று கேட்டார்.

Dhoni 1

பிறகு லெக் அம்பயரின் முடிவே இந்த பந்துக்கு சரியானது மற்றும் லெக் அம்பயரே இதனை முடிவு செய்யவேண்டும் அது விதி என்று தோனியிடம் கூறினேன். பிறகு தோனி களத்தில் இருந்து வெளியேறினார். அவரின் இந்த செயலுக்கு அபராதம் சற்று குறைக்கப்பட்டு இருக்கலாம் என்பது என் கருத்து என்று அம்பயர் ப்ருஸ் அக்ஸன்போர்ட் கூறினார்.

Advertisement