மச்சான் ஒரு பந்து சும்மாவே எறங்குவான்… நீ போடு மாட்டுவான் – தமிழில் கிண்டல் செய்த தினேஷ் கார்த்திக் – வீடியோ உள்ளே

tamim
- Advertisement -

இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான நிடாஸ் டி20 கோப்பை முத்தரப்பு கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது.

karthik

- Advertisement -

இந்தியா – வங்கதேச அணிகளிடையே நடைபெற்ற போட்டி நேற்று நடைபெற்றது.நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி வங்கதேச அணியை 17ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது தினேஷ் கார்த்திக் வங்கதேச வீரர் முஸ்தபீர் ரஹீமை தமிழில் கிண்டல் செய்து பேசி இருக்கிறார். இலங்கைக்கு எதிராக அபாரமாக விளையாடி 214 ரன்களை விரட்டி வென்றபின் மைதானத்தில் பாம்பு டான்ஸ் ஆடினார் முஷ்பிகூர் ரஹ்மான்.

rahim1

அதைவைத்து தான் நேற்று தினேஷ் கார்த்திக் வாஷிங்டன் சுந்தரிடம் முஷ்பிகூர் ரஹ்மானை கிண்டல் செய்து தமிழில் பேசியுள்ளார்.தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகின்றது .நேற்றைய போட்டியின் போது வாஷிங்டன் சுந்தர் பந்து வீசும் போது தினேஷ் கார்த்திக் ”டேய் மச்சான் பால சும்மா வெளிய போடு. இறங்கி அடிக்க ட்ரைபண்ணினா மாட்டுவான்” என்று கூறினார்.

- Advertisement -

அதேபோல மீண்டும் தமிழில் வாஷிங்டன் சுந்தரிடம் பேசிய அவர் ”டேய் மச்சான் இந்த பால் நல்லா இருந்துச்சு இப்படியே போடு” என்று கூறியுள்ளார். மீண்டும் ஒருமுறை சிரித்துக்கொண்டே வாஷிங்டன் சுந்தரிடம் ”மச்சான் நீ கெத்தா போடு இல்லனா அந்த பாம்பு (முஸ்தபீர் ரஹீம்) நம்மள போட்டுட்டு போய்டும்” என்று நக்கலடித்துள்ளார்.

rahim1

இந்த தொடர் முழுவதும் தினேஷ் கார்த்திக் தமிழக வீரர்களிடம் தமிழில் மட்டுமே பேசி வருகின்றார். இதனால் தமிழ் தெரியாத பிற வீரர்கள் இவர்கள் பேசுவது புரியாமல் முழிக்கின்றனர்.

Advertisement