140 வருட ஆஷஸ் வரலாற்றில் ஸ்டுவர்ட் ப்ராட் பிரம்மாண்ட சாதனை! – அப்படி என்ன சாதனை தெரியுமா?

Broad
- Advertisement -

நூற்றாண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் 2021/22 சீசன் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 2021 டிசம்பரில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் துவங்கிய இந்த சிறப்பு வாய்ந்த தொடரில் ஆரம்பம் முதலே ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தியது.மொத்தம் 5 போட்டிகள் கொண்ட இந்த புகழ்மிக்க டெஸ்ட் தொடரில் பிரிஸ்பேன், அடிலெய்டு, மெல்போர்ன் ஆகிய 3 மைதானங்களில் நடந்த முதல் 3 போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என 2 துறைகளிலும் அபாரமாக செயல்பட்ட ஆஸ்திரேலியா இங்கிலாந்தை மண்ணைக் கவ்வ செய்து 3 – 0 என தொடரில் முன்னிலை பெற்றது.

aus vs eng

பேட்டிங் மோசம்:
இந்த தொடரில் ஜோ ரூட் தலைமையில் விளையாடி வரும் இங்கிலாந்து வழக்கத்தை விட படு மோசமான பேட்டிங் காரணமாக அடுத்தடுத்த 3 போட்டிகளில் படுதோல்விகளை சந்தித்தது. இதையடுத்து சிட்னி நகரில் நடந்த 4வது போட்டியில் தட்டுத்தடுமாறிய இங்கிலாந்து வெறும் 1 விக்கெட் கையிருப்புடன் அந்த போட்டியை போராடி டிரா செய்து வைட்வாஷ் தோல்வியை தவிர்த்து நிம்மதி பெருமூச்சு விட்டது.

- Advertisement -

இதை அடுத்து இந்த தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி ஆஸ்திரேலியாவின் ஹோபார்ட் நகரில் நேற்று துவங்கியது. பகல் – இரவு டெஸ்ட் போட்டியாக இளஞ்சிவப்பு நிற பந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச செய்ய தீர்மானித்தது.

broad

திணறும் இங்கிலாந்து:
இதை அடுத்து பேட்டிங்கை துவக்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கட்டுக்கோப்புடன் பந்துவீசிய இங்கிலாந்து பவுலர்கள் அந்த அணியை 303 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் சதமடித்து 101 ரன்களும், கிறிஸ் க்ரீன் 74 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் மார்க் வுட் ஆகியோர் தலா 3 விக்கெட்கள் சாய்த்தனர்.

- Advertisement -

இதை அடுத்து தனது பேட்டிங்கை துவக்கிய இங்கிலாந்து மீண்டும் ஆஸ்திரேலியாவின் அதிரடியான வேகப்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் வெறும் 188 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கிறிஸ் வோக்ஸ் 36 ரன்கள் எடுத்தார், ஆஸ்திரேலியா சார்பில் ஸ்காட் போலன்ட் 6 விக்கெட்டுகளை சாய்த்து மிரட்டினார்.இதை அடுத்து 115 ரன்கள் முன்னிலை பெற்ற ஆஸ்திரேலியா 2வது நாள் முடிவில் 37/3* என்ற நிலையில் 152 ரன்கள் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

broad 1

ப்ராட் ப்ரம்மாண்ட சாதனை:
இந்த வருடம் ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து பேட்டிங் மோசமாக இருந்த போதிலும் அந்த அணியின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது, குறிப்பாக அந்த அணியின் அனுபவ வீரர் ஸ்டூவர்ட் பிராட் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளில் 11 விக்கெட்டுகள் எடுத்து அசத்தி உள்ளார்.இதன் வாயிலாக “ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இங்கிலாந்து பந்துவீச்சாளர்” என்ற இங்கிலாந்தின் முன்னாள் ஜாம்பவான் இயன் போத்தாமை முந்தி புதிய வரலாற்றை அவர் இன்று படைத்துள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலி மீது ஐ.சி.சி நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்கனும் – கொதித்தெழுந்த மைக்கல் வாகன்

கடந்த 1882 முதல் நடைபெற்று வரும் 140 ஆண்டுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஷஸ் தொடரில் அவர் இந்த பிரம்மாண்ட சாதனையை படைத்துள்ளார். ஆஷஸ் தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இங்கிலாந்து பவுலர்கள் இதோ:

ஸ்டுவர்ட் பிராட் : 129 விக்கெட்கள் (64 இன்னிங்ஸ்)*
இயன் போத்தாம் : 128 விக்கெட்கள் (58 இன்னிங்ஸ்)
பாப் வில்ஸ் : 123 விக்கெட்கள் (61 இன்னிங்ஸ்)
ஜேம்ஸ் அண்டர்சன் : 112 (64 இன்னிங்ஸ்)

Advertisement