விராட் கோலி மீது ஐ.சி.சி நடவடிக்கை எடுத்து தண்டனை கொடுக்கனும் – கொதித்தெழுந்த மைக்கல் வாகன்

Vaughan
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி தொடரை 2 க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததன் காரணமாக மீண்டும் ஒருமுறை தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை தவற விட்டுள்ளது.

INDvsRSA

- Advertisement -

இந்த போட்டியின்போது தென்ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கருக்கு எதிரான ஒரு டிஆர்எஸ் முடிவு குறித்த ஒரு சர்ச்சை அனைவரது மத்தியிலும் பரவலாக பேசப்பட்டது. ஏனெனில் அந்த டிஆர்எஸ் முடிவு தவறாக வந்துவிட்டது என்று இந்திய வீரர்கள் அனைவரும் கோபப்பட்டனர். அதையெல்லாம் தாண்டி ஒருபடி மேலாக கேப்டன் விராட் கோலி களத்தில் இருந்த ஸ்டம்ப் மைக்கில் சில வார்த்தைகளை உதிர்த்து தனது கோபத்தை காண்பித்தார்.

அவரது இந்த செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று இது போன்று அவர் செய்யக்கூடாது என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலியின் இந்த செயல் குறித்து பேசி உள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கல் வாகன் கூறுகையில் :

Elgar

உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் பார்க்கும் சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோன்று நடந்து கொள்வது தவறான ஒரு செயல் இதன் காரணமாக ஐ.சி.சி விராட் கோலியை சில போட்டிகளில் இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய விராட் கோலிக்கு பதிலாக – இவரே புது கேப்டனாக செயல்படுவார்

மேலும் என்ன தான் மூன்றாவது அம்பயர் தவறான முடிவை அளித்திருந்தாலும் அந்த அதிர்ச்சியை களத்தில் இப்படி அநாகரீகமாக வெளிக்காட்டக்கூடாது என்றும் மைக்கல் வாகன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement