டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறிய விராட் கோலிக்கு பதிலாக – இவரே புது கேப்டனாக செயல்படுவார்

IND
Advertisement

இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி இன்று டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாக திடீர் அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் அறிவித்துள்ளார். இந்த விடயமானது தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் அண்மையில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை தொடருக்கு பின்னர் டி20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பதவியை துறந்த அவருக்கு ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியும் பிசிசிஐ மூலம் மறுக்கப்பட்டது.

kohli

ஆனால் தான் தொடர்ந்து டெஸ்ட் கேப்டனாக செயல்படுவேன் என்று உறுதி அளித்திருந்த விராட் கோலி தென்னாப்பிரிக்க மண்ணில் நடைபெற்று முடிந்துள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு பின்னர் தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக முறைப்படி அறிவித்துள்ளார்.

- Advertisement -

அவரது இந்த விலகலுக்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும் தொடர்ச்சியாக அவர் ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணியில் தனது பங்களிப்பை அளிக்க தயாராக இருக்கிறார். இந்நிலையில் விராத் கோலிக்கு பிறகு இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக யார் செயல்படுவார் என்பதற்கான பதில் கிடைத்துள்ளது. அதன்படி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா காயம் காரணமாக இந்த தொடரில் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.

Rohith

ஒருநாள் தொடரையும் தவறவிட்டுள்ள ரோகித் சர்மா நிச்சயம் இந்தியாவில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் இருந்து மூன்று வகையான இந்திய அணிக்கும் கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது. அதேபோன்று துணை கேப்டனாக ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : என்னிடம் அந்த திறமை இருக்குன்னு நம்பிய தோனிக்கு நன்றி – கேப்டன்சி விலகல் கடிதத்தில் கோலி உருக்கம்

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியை பெற்ற ரோகித் சர்மா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டையும் சேர்த்து மூன்று வகையான கிரிக்கெட்க்கும் கேப்டனாக மாறியுள்ளார். இன்னும் ஒரு சில ஆண்டுகள் ரோஹித் சர்மாவால் இந்திய அணியை வழிநடத்த முடியும் என்பதனால் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.

Advertisement