என்னிடம் அந்த திறமை இருக்குன்னு நம்பிய தோனிக்கு நன்றி – கேப்டன்சி விலகல் கடிதத்தில் கோலி உருக்கம்

Dhoni virat kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2014-ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய தொடரின் போது தோனி ஓய்வு முடிவை அறிவித்ததைத் தொடர்ந்து இந்திய அணியின் டெஸ்ட் அணியின் கேப்டனாக பதவி ஏற்றார். கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளாக இந்திய டெஸ்ட் அணியை வழிநடத்திய விராட் கோலி அயல்நாடுகளில் நடைபெறும் டெஸ்ட் தொடர்களை கூட இந்திய அணி வெற்றி பெறும் அளவிற்கு முன்னேற்றி உள்ளார். கடந்த பல ஆண்டுகளாகவே நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்திய அணியை அவ்வளவு வலுவாக விராட் கோலி அமைத்துள்ளார்.

Kohli

- Advertisement -

இந்நிலையில் இன்று அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் கேப்டன் பதவியில் இருந்து வெளியேறுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் பகிர்ந்து கொண்டார். அதனை கண்ட ரசிகர்கள் பலரும் மிகவும் வருத்தம் அடைந்துள்ளனர். ஏனெனில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இத்தனை ஆண்டுகளாக சிறப்பான பல வெற்றிகளை இந்திய அணிக்கு பெற்று தந்த விராட் கோலி திடீரென கேப்டன் பதவியில் இருந்து வெளியேறியுள்ளது அனைவருக்கும் வருத்தத்தை தந்துள்ளது.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டதாவது : 7 வருட கடின உழைப்பு டெஸ்ட் கிரிக்கெட்க்காக அளித்துள்ளேன். இந்திய அணி தற்போது சரியான திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. நிச்சயம் என்னுடைய பணியை நேர்மையாக செய்துள்ளதாக கருதுகிறேன்.இருப்பினும் எந்த ஒரு விடயமும் ஒரு இடத்தில் நின்று தான் ஆக வேண்டும். அந்த வகையில் என்னுடைய டெஸ்ட் கேப்டன் பதவியும் தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக நினைக்கிறேன்.

kohli dhoni

7 ஆண்டுகாலமாக தலைமை தாங்கிய நான் இந்திய அணிக்காக 120% சதவீத என்னுடைய உழைப்பை அளித்துள்ளேன்.எனக்கு இந்த வாய்ப்பை அளித்த பி.சி.சி.ஐ-க்கு மிகவும் நன்றி. நீண்ட ஆண்டுகள் இந்திய அணியை வழிநடத்த என்னை அனுமதித்த அவர்களுக்கு நன்றி. என்னுடைய விளையாடிய சக வீரர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி இந்த பயணம் ஒரு மறக்க முடியாத பயணம் என்று விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணிக்கு புதிய கேப்டன். தோனி தானாக முன்வந்து விலகுகிறார் – வெளியான திட்டம் இதோ

மேலும் இந்த கேப்டன்சி விலகல் கடிதத்தில் தோனி குறித்தும் அவர் நெகிழ்ச்சியான கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் என்னிடம் கேப்டன்சி திறமை இருக்கிறது என்று என்னை நம்பி எனக்கு வாய்ப்பளித்த தோனிக்கு நன்றி என்று அவர் உருக்கமுடன் ஒரு கருத்தை பகிர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement