அந்த விஷயத்துல இந்திய வீரர்கள் பெஸ்ட்.. விராட் கோலி அதை செய்ய மாட்டாரு.. தெ.ஆ லெஜெண்ட் பாராட்டு

Brian Mcmillan
- Advertisement -

நவீன யுகத்தில் டி20 போட்டிகளின் வருகையால் நூற்றாண்டுக்கு முன்பாக துவங்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் அழிந்து வருவதாக நிறைய விமர்சனங்கள் காணப்படுகின்றன. மேலும் 5 நாட்கள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளை விட 3 மணி நேரத்தில் திரில்லர் விருந்து படைக்கும் டி20 போட்டிகளையே ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்த்து அதிகப்படியான ஆதரவை கொடுக்கிறார்கள்.

இது ஒரு புறமிருக்க நிறைய வீரர்கள் இப்போதெல்லாம் தங்களுடைய வாழ்வில் முன்னேற உதவும் பணத்தை பெறுவதற்காக டெஸ்ட் போட்டிகளை விட டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். அதற்காக 35 வயதுக்கு முன்பாகவே நட்சத்திர வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக வெளிப்படையாக அறிவித்து டி20 கிரிக்கெட்டில் அதிகமாக விளையாடுகிறார்கள்.

- Advertisement -

விராட் கோலி மாதிரி:
அந்த வரிசையில் நேற்று முன்தினம் தென்னாப்பிரிக்க வீரர் ஹென்றிச் க்ளாஸென் வெறும் 32 வயதிலேயே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதற்கு முன்பாக குயிண்டன் டீ காக் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றதை போல நிறைய வீரர்கள் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கே முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நவீன யுகத்தில் வாழ்வதற்காக பணத்திற்கு மதிப்பு கொடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் நிறைய வீரர்கள் விடை பெறுவதை புரிந்துகொள்ள முடிவதாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் பிரையன் மெக்மிலன் கூறியுள்ளார். அதே சமயம் விராட் கோலி போன்ற இந்திய வீரர்கள் பிபிஎல் மாதிரியான வெளிநாட்டு தொடர்களில் விளையாடாமல் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுப்பதை பாராட்டும் அவர் மற்ற வீரர்களும் அதை பின்பற்ற முயற்சிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நவீன கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் தேவையான பணத்தை சம்பாதிக்கிறார்கள் என்று நம்புகிறேன். இல்லையெனில் அவர்களுடைய வாழ்க்கையை நடத்துவது கடினமாகி விடும். எங்களுடைய வீரர்களில் ஒருவர் (க்ளாஸென்) தற்போது ஓய்வு பெற்றுள்ளார். அவர் கண்டிப்பாக டி20 கிரிக்கெட்டில் விளையாடுவார். அது போல நாடுகள் தங்கள் வீரர்களை எந்த சாராம்சரத்தில் நடத்த வேண்டும் என்பது பற்றி எனது கருத்துக்கள் இருக்கின்றன”

இதையும் படிங்க: இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நான் கண்டிப்பா ஆடுவேன்.. வாக்குறுதி அளித்த – இந்திய வீரர்

“இந்த உலகம் தான் நீங்கள் நாட்டுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று விரும்புவதாக நான் நினைக்கிறேன். இந்த விஷயத்தை இந்தியா சரியாக செய்வதாகவும் நான் கருதுகிறேன். குறிப்பாக விராட் கோலி போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முன்னுரிமை கொடுத்து விளையாடுவது மகத்தானதாகும். அவரைப் போன்ற வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை புறக்கணித்து பிபிஎல் தொடரில் விளையாடுவதை பார்க்க முடியாது. மொத்தத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எப்போதும் அச்சுறுத்தல்கள் இருக்கும். ஆனால் டெஸ்ட் தான் எப்போதுமே கிரிக்கெட்டின் முதன்மையான போட்டியாக இருக்கும்” என்று கூறினார்.

Advertisement