இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நான் கண்டிப்பா ஆடுவேன்.. வாக்குறுதி அளித்த – இந்திய வீரர்

IND
- Advertisement -

சமீபத்தில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. அதனை தொடர்ந்து அடுத்ததாக வரும் ஜனவரி 11-ம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.

இந்த தொடருக்கு பின்னர் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது வரும் ஜனவரி 25-ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதால் இந்த தொடர் இரு அணிகளுக்குமே மிக முக்கியத்துவம் வாய்ந்த தொடராக கருதப்படுகிறது.

இந்து தொடருக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்ட இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி தான் இந்த தொடரில் விளையாட தயாராக இருப்பதாக தற்போது பேட்டி ஒன்றினை அளித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த முகமது ஷமி கூறுகையில் : தற்போது கணுக்காலில் ஏற்பட்ட காயத்திலிருந்து நல்ல முறையில் முன்னேற்றத்தை கண்டு வருகிறேன். இப்போதும் எனக்கு சிறிய வலி உள்ளது. ஆனாலும் பரவாயில்லை எனது பயிற்சிகளை ஆரம்பித்துவிட்டேன். நிச்சயம் இங்கிலாந்து தொடருக்கான அணியில் நான் இடம் பிடிக்க முடியும் என்று நம்புவதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க : அப்படியே போய்டுங்க.. இந்தியாவை விமர்சித்த பாக் இயக்குனருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

அவரது இந்த பேட்டிக்கு பிறகு தற்போது இந்திய அணி அவரை அணியில் சேர்க்கும் திட்டத்தை வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இருப்பினும் அவரது காயத்தின் தன்மையை பொறுத்தே நிர்வாகம் இந்த முக்கிய முடிவை எடுக்கும் என்பதால் ஷமி இடம் பெறுவாரா? இல்லையா? என்பது இன்னும் சில நாட்களில் தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement