அப்படியே போய்டுங்க.. இந்தியாவை விமர்சித்த பாக் இயக்குனருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Mickey Arthur
- Advertisement -

இந்தியாவில் கடந்த வருடம் நடைபெற்று முடிந்த ஐசிசி 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி செமி ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் பரிதாபமாக வெளியேறியது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிராக உலக கோப்பையில் தொடர்ந்து 8வது முறையாக தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் கத்துக்குட்டியாக பார்க்கப்படும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக அவமான தோல்வியை பதிவு செய்தது.

அதற்கு இந்தியாவில் இருக்கும் மைதானங்களில் பவுண்டரி அளவுகள் சிறியதாக இருப்பதே காரணம் என்று அந்த அணியினர் சாக்கு சொன்னதை மறக்க முடியாது. அதை விட இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது அகமதாபாத் மைதானத்தில் “சக்தே இந்தியா” உத்வேக பாடல் அடிக்கடி ஒலிபரப்பப்பட்டதாக பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் கடுமையாக விமர்சித்தார்.

- Advertisement -

மறுபடியும் வராதீங்க:
ஆனால் “தில்தில் பாகிஸ்தான்” எனும் தங்களின் உத்வேக பாடல் திட்டமிட்டு வேண்டுமென்றே அகமதாபாத் மைதானத்தில் ஒலிபரப்பப்படாததே இந்தியாவுக்கு எதிராக தாங்கள் தோல்வியை சந்திக்க காரணம் என்றும் அவர் பேசியிருந்தார். எனவே இது ஐசிசி நடத்தும் தொடருக்கு பதிலாக பிசிசிஐ நடத்தும் தொடரை போல் இருப்பதாக தெரிவித்த அவர் அவை அனைத்திற்கும் ஃபைனலுக்கு வந்து இந்தியாவை தோற்கடித்து பழி தீர்ப்போம் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த சூழ்நிலையில் உலகக் கோப்பையை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய மிக்கி ஆர்தர், கிராண்ட் ப்ராட்பர்ன், ஆண்ட்ரூ புடிக் ஆகிய பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மற்றும் 2 பயிற்சியாளர்களும் தற்காலிகமாக விடுமுறை எடுத்து தங்களுடைய நாட்டுக்கு சென்றுள்ளார்கள். குறிப்பாக 2023 ஆசியக் கோப்பை முதல் தொடர்ந்து பாகிஸ்தான் அணியுடன் செயல்பட்டதால் தற்காலிகமாக ஓய்வு வேண்டும் என நாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டு இந்த மூவரும் தங்கள் நாட்டுக்கு சென்றுள்ளார்கள்.

- Advertisement -

இந்நிலையில் உங்களுடைய சேவை எங்களுக்கு போதும் என்று அறிவித்துள்ள பாகிஸ்தான் வாரியம் அந்த 3 பேரையும் தங்கள் அணியிலிருந்து விடுவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சொல்லப்போனால் ஏற்கனவே மிக்கி ஆர்த்தருக்கு பதிலாக முன்னாள் வீரர் முகமது ஹபீஸ் பாகிஸ்தான் அணியின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: ரோஹித்தை கேப்டன் பதவியில் நீக்கியதே இதற்காகத்தான்.. மும்பை அணி கொடுத்த டிவிஸ்ட் – விவரம் இதோ

இருப்பினும் அவருடைய தலைமையிலும் நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் 3 – 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்தது வேறு கதை. ஆனால் 2023 ஆசிய மற்றும் உலக கோப்பையில் பாகிஸ்தான் மோசமான தோல்விகளை சந்தித்ததால் அந்த 3 பேரையும் தற்போது அந்நாட்டு வாரியம் கழற்றி விட்டுள்ளது. குறிப்பாக ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தம் இன்னும் முடிவுக்கு வராத சூழ்நிலையில் அதற்கு நிவாரணமாக சில மாத சம்பளங்களை கொடுத்து அந்த 3 பேரையும் பாகிஸ்தான் வாரியம் விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement