ரோஹித்தை கேப்டன் பதவியில் நீக்கியதே இதற்காகத்தான்.. மும்பை அணி கொடுத்த டிவிஸ்ட் – விவரம் இதோ

Rohit
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது தற்போது 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் எதிர்வரும் 17-வது சீசனானது கோடை காலத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தற்போது இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்றுள்ளது.

அதோடு இந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மினி ஏலமும் கடந்த டிசம்பர் 19-ஆம் தேதி துபாயில் நடைபெற்று முடிந்தது. அந்த ஏலத்தில் பங்கேற்ற 10 அணிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் தங்கள் அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு தேர்வு செய்து தற்போது தங்களது அணிகளை பலப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியானது ஏலத்திற்கு முன்பாகவே குஜராத் அணியிடம் இருந்து டிரேடிங் முறையில் ஹார்திக் பாண்டியாவை தங்களது அணியில் நினைத்து அவரை கேப்டனாகவும் நியமித்துள்ளது. அதோடு ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்தும் அவர்கள் நீக்கியுள்ளனர்.

இப்படி ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள வேளையில் தற்போது அடுத்ததாக மும்பை இந்தியன்ஸ் அணி ரோகித் சர்மாவை விடுவிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி தற்போது 36 வயதாகும் ரோகித் சர்மா இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே விளையாடுவார் என்பதனால் அடுத்த மெகா ஏலத்தில் அவரை கழட்டி விடுவதற்காகவே ரோகித் சர்மாவை சாதாரணமான வீரராக விளையாட வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு அடுத்த ஆண்டு மெகா ஏலம் நடைபெறும் போது மும்பை அணியில் 37 வயதான ரோஹித் சர்மா நிச்சயம் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ஒன்றரை நாளில் முடிந்த மேட்ச்.. கேப் டவுன் மைதானத்துக்கு 2 அதிரடி தண்டனை வழங்கிய ஐசிசி

மேலும் தக்கவைக்கப்படும் நான்கு வீரர்களாக பாண்டியா, பும்ரா, சூரியகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோர் மட்டுமே இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement