- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கில், ருதுராஜ் கிடையாது.. இந்த 2 இந்திய பசங்க தான் என்னை மாதிரி ஸ்டைலிஷா ஆடுறாங்க.. லாரா பாராட்டு

இந்திய கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற மூத்த வீரர்களின் கேரியர் இன்னும் சில வருடங்களில் முடிவடைய உள்ளது. அவர்களைத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவை தாங்கிப் பிடிக்க நிறைய இளம் கிரிக்கெட் வீரர்கள் வந்த வண்ணம் உள்ளனர். அதில் சுப்மன் கில் சமீபத்திய வருடங்களில் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஓரளவு நன்றாக விளையாடி இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அதே போல ருதுராஜ் தமக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தியுள்ளார். அதனால் அவர்கள் இந்திய அணியின் வருங்கால நட்சத்திரங்களாக உருவெடுப்பார்கள் என்று சில முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போதைய இளம் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் மிகுந்த சுவாரசியமான திறமை கொண்டவர்கள் என்று ஜாம்பவான் பிரையன் லாரா கூறியுள்ளார்.

- Advertisement -

பிரைன் லாரா போல:

குறிப்பாக இடது கை பேட்ஸ்மேன்களான அவர்கள் தம்மைப் போலவே அட்டாக் செய்யும் ஸ்டைலில் விளையாடுவதாக பிரைன் லாரா பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் 2 சுவாரசியமான இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அது ஜெயஸ்வால் மற்றும் அபிஷேக் ஷர்மா. அனைத்தையும் விட முதலில் நான் இடது கை பேட்ஸ்மேன்களை விரும்புபவன்”

“அந்த இருவரும் இளமையாக உள்ளனர். அவர்கள் தங்களுடைய கிரிக்கெட்டை என்னைப் போல ஸ்டைலாக விளையாடுகிறார்கள் என்று நினைக்கிறேன். அட்டாக் செய்யும் வகையில் ஸ்டைலிசாக விளையாடுகின்றனர். அந்த இருவருடன் கடந்த சில வருடங்களாக நான் வைத்துள்ள தொடர்பு மிகவும் ஸ்பெஷலானது. தற்போது அவர்கள் தங்களுடைய பலத்தைப் பின்பற்றி விளையாடுவதை பார்ப்பது நன்றாக இருக்கிறது” என்று கூறினார்.

- Advertisement -

ஜெய்ஸ்வால் – அபிஷேக்:

அவர் கூறுவது போல 2024 ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணியில் அடித்து நொறுக்கிய அபிஷேக் சர்மா கடந்த ஜிம்பாப்வே தொடரில் அறிமுகமாகி டக் அவுட்டானார். அடுத்த போட்டியிலேயே பட்டாசாக விளையாடிய அவர் 48 பந்துகளில் சதமடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். மறுபுறம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரை சதமடித்து சாதனை படைத்த ஜெய்ஸ்வால் கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 712 ரன்கள் குவித்தார்.

இதையும் படிங்க: ஹைடன் கிடக்குறாரு.. இதை மட்டும் செஞ்சா ஜெய்ஸ்வால் ஆஸியில் அசத்த முடியும்.. ஜாம்பவான் லாரா அட்வைஸ்

அந்த தொடரில் இங்கிலாந்து ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஜெய்ஸ்வால் ஹாட்ரிக் சிக்ஸ்ர்களை பறக்க விட்டார். மேலும் ஒரு டெஸ்ட் போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற வாசிம் அக்ரம் உலக சாதனையையும் அவர் சமன் செய்தார். அந்த வகையில் அபிஷேக் சர்மா, ஜெயஸ்வால் ஆகிய இருவருமே கொஞ்சம் பிரைன் லாரா போல அதிரடியாக விளையாடும் ஸ்டைலை கொண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -