விராட் கோலியிடமிருந்து இனிமே தான் இந்த விஷயத்தை பாப்பீங்க – பிரெட் லீ ஓபன்டாக்

Lee
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், ரன் மெஷினுமான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சதம் அடிக்காமல் திணறி வருகிறார். தனது கிரிக்கெட் கரியரின் ஆரம்பத்திலிருந்து வாடிக்கையாக சதங்களை விளாசும் வழக்கத்தை கொண்ட கோலி வெகு விரைவாக 70 சதங்கள் விளாசிய வேளையில் நிச்சயமாக சச்சின் டெண்டுல்கரின் 100 சதம் சாதனையை பூர்த்தி செய்து அதனையும் தாண்டி செல்வார் என்று பலரும் விராட் கோலி புகழ்ந்த வேளையில் கடந்து 2019 ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக சதம் விளாசிய அவர் அதன் பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளாக சதம் அடிக்காமல் மோசமான ஃபார்மினால் தவித்து வருகிறார்.

Kohli

- Advertisement -

கடைசியாக நடைபெற்ற பல தொடர்களில் தொடர்ச்சியாக தனது மோசமான பேட்டிங் காரணமாக பெரிய சரிவினை சந்தித்து வரும் விராட் கோலி அணியிலிருந்தும் நீக்கப்படும் அபாயத்திலும் உள்ளார். அண்மைக்காலமாகவே தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் ரன் அடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் சிறப்பாகவே துவங்கினாலும் அவரது இடத்தின் மீதுள்ள அழுத்தம் காரணமாக ஆட்டம் இழந்து வெளியேறி வருகிறார்.

குறிப்பாக நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடரில் டி20 போட்டிகளிலும் சரி, ஒருநாள் போட்டியிலும் சரி பதட்டத்துடன் விளையாடி கோலி ஆட்டம் இழந்து வெளியேறி வருவது அனைவரது மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து சற்று ஓய்வினை எடுத்துக்கொண்டு மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பி வரவேண்டும் என்று பலர் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Kohli

இவ்வேளையில் ஒரு சிலர் மட்டும் அவருக்கு ஆதரவு தெரிவித்து அவரது திறன் மீதும் நம்பிக்கை வைத்து சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ கூறுகையில் : விராட் கோலிக்கு தற்போது தான் 33 வயதாகிறது அதற்குள் அவர் 70 சதங்கள் விளாசி விட்டார்.

- Advertisement -

இன்னும் நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவார். என்னை பொறுத்தவரை தற்போது வரை விராட் கோலியின் சிறப்பான ஆட்டத்தை காணவில்லை. இனிவரும் காலங்களில் அவர் முன்பை விட சிறப்பாக விளையாடி ரன்களை குவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. முன்பு இருந்ததை விட இன்னும் சற்று அதிகமான திறனை இனிவரும் போட்டிகளில் விராட் கோலி வெளிப்படுத்துவார்.

இதையும் படிங்க : விராட் கோலியை நீக்க சொல்லும் அளவுக்கு உண்மையாகவே பார்ம் அவுட் தானா – இல்லையென கூறும் புள்ளிவிவரம் இதோ

சச்சினை பொருத்தவரை கூட அவர் ஓய்வு பெறும் கடைசி சில ஆண்டுகளிலேயே அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அந்த வகையில் விராட் கோலியும் நிச்சயம் அவரது கரியரின் இறுதியில் உச்சகட்ட ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகுவார் என பிரெட் லீ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement