விராட் கோலியை நீக்க சொல்லும் அளவுக்கு உண்மையாகவே பார்ம் அவுட் தானா – இல்லையென கூறும் புள்ளிவிவரம் இதோ

- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 3 வருடங்களாக சதமடிக்கவில்லை என்பதற்காக தினந்தோறும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார். கடந்த 2008இல் அறிமுகமாகி 2011 முதல் 3 வகையான இந்திய அணியிலும் ரன் மெஷினாக உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் அனைத்து சூழ்நிலைகளிலும் அபாரமாக எதிர்கொண்ட அவர் 33 வயதிலேயே 20000க்கும் மேற்பட்ட ரன்களையும் 70 சதங்களையும் அடித்து நிறைய சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து ஏற்கனவே தன்னை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்று நிரூபித்துள்ளார்.

ஆனால் கடைசியாக கடந்த 2019இல் சதமடித்த அவரால் அதன்பின் சுமார் 3 வருடங்களாக டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் என அனைத்து வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 100 இன்னிங்ஸ்களுக்கும் மேலாக சதமடிக்க முடியவில்லை. இருப்பினும் இடையிடையே 30, 50, 70 போன்ற நல்ல ரன்களை அடித்தாலும் பார்ம் அவுட் என்றே அச்சிடப்படாத முத்திரையை அவர் மீது குத்தியுள்ள அனைவரும் விமர்சித்து வருகிறார்கள்.

- Advertisement -

தரத்திலும் தரம்:
ஆரம்பக்காலம் முதல் 2019 வரை களமிறங்கிய 3 – 5 போட்டிகளுக்கு ஒருமுறை சதமடித்து வந்த அவர் களமிறங்கினாலே சதமடிப்பார் என அனைவரும் நினைக்கும் அளவுக்கு அனைவரின் மனதிலும் ஆழமாக தனக்கென்று ஒரு தரத்தை ஏற்படுத்தியுள்ளார். அது தான் தற்போது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஏனெனில் தரமான அவரிடமிருந்து அனைவரும் சதத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். 30 – 50 போன்ற ஓரளவு நல்ல ரன்களை பார்ப்பதில்லை.

மேலும் இந்தியாவுக்கும் ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக செயல்பட்டு வந்த அவர் கோப்பையை வாங்கி தரவில்லை என்ற விமர்சனத்துடன் இந்த சதமடிக்கவில்லை என்ற விமர்சனத்திற்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காக கடந்த 2021 அக்டோபர் முதல் 2022 ஜனவரி வரை படிப்படியாக அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தார். அதனால் சுதந்திர பறவையாக விளையாட துவங்கிய அவர் நிச்சயம் சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

உண்மையான பார்ம்:
ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக 3 கோல்டன் டக் அவுட் உட்பட எதிர்பார்த்ததற்கு எதிர்மறையாக அவர் செயல்பட்டதால் “இவரின் கதை முடிந்தது அவ்வளவுதான்” என்று பேசத் துவங்கியுள்ள அனைவரும் அடுத்ததாக அணியில் இருந்து நீக்குமாறு கேட்கத் தொடங்கி விட்டார்கள். இப்படி அனைவரும் கேட்கும் அளவுக்கு உண்மையானவை அவர் பார்ம் அவுட் ஆகிவிட்டாரா என்பதை பற்றி பார்ப்போம்:

1. அனைவரும் பார்ம் அவுட் எனக்கூறும் 2019க்குப்பின் அதாவது 2020 ஜனவரி 1-ஆம் தேதியிலிருந்து இதுநாள் வரை டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டையும் சேர்த்து அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இப்போதும் விராட் கோலி தான் முதலிடத்தில் உள்ளார். அந்த பட்டியல் இதோ:
1. விராட் கோலி : 2265 (72 இன்னிங்ஸ்)
2. ரோஹித் சர்மா : 2157 (59 இன்னிங்ஸ்)
3. ரிஷப் பண்ட் : 2097 (65 இன்னிங்ஸ்)
4. கேஎல் ராகுல் : 1979 (51 இன்னிங்ஸ்)
5. ஷ்ரேயஸ் ஐயர் : 1598 (48 இன்னிங்ஸ்)

- Advertisement -

2. இங்கே இன்னிங்ஸ் அதிகமாக இருக்கிறதே என்று நீங்கள் கேட்கலாம். ஆம் மற்ற இந்தியர்களை விட அதிக இன்னிங்சில் விளையாடியுள்ளது உண்மைதான். ஆனால் என்னமோ எந்த போட்டியிலும் எந்த ரன்களையும் அடிக்காதததை போல் பார்ம் அவுட் என்றுதானே அனைவரும் கூறுகிறார்கள். இருப்பினும் விராட் கோலி அந்த அளவுக்கு மோசமாக செயல்படாமல் முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளார் என்பதை இந்த புள்ளி விவரம் கூறுகிறது. 10க்கு 9 அல்லது 8 போட்டிகளில் ரன்கள் அடிக்காமல் இருப்பதே பார்ம் அவுட் எனும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தமாகும். அதுபோல அவர் செயல்பட்டிருந்தால் இந்த பட்டியலில் டாப் 5இல் கூட அவரால் இடம் பிடித்திருக்க முடியாது.

3. அதேபோல் கடந்த 2020 முதல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 21 முறை 50க்கும் மேற்பட்ட போட்டிகளில் விராட் கோலி ரன்களை அடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக கேஎல் ராகுல் மட்டும்தான் 19 முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.

- Advertisement -

4. அதற்காக இங்கே விராட் கோலி நல்ல பார்மில் உள்ளார் என்றும் குறிப்பிடவில்லை. அவருடைய தரத்திற்கு இது பாதியளவு பார்ம் என்று கூறலாம். அதே சமயம் தினம்தோறும் விமர்சிக்கும் அளவுக்கு மோசமான பார்மிலும் அவர் இல்லை என்பதே நிதர்சனம். அவரும் மெஷின் கிடையாது மனிதர் என்ற நிலையில் வரலாற்றில் சச்சின் உட்பட அனைவரும் இதுபோன்ற மோசமான தருணங்களை சந்தித்துள்ளார்கள் என்ற நிலைமையில் அவரை தினந்தோறும் விமர்சிக்காமல் ஆதரவு கொடுத்தாலே நிச்சயம் அவரால் பழைய பன்னீர்செல்வமாக திரும்ப முடியும்.

டி20 பார்ம்:
மேலும் பெரிய ரன்களை அடிக்காமல் எத்தனை நாட்கள் அணியில் காலத்தை தள்ளுவீர்கள், டெஸ்ட் அணியில் அஷ்வின் நீக்கப்படும் போது டி20 அணியில் விராட் கோலியை நீக்குவதில் தவறில்லை என்று ஜாம்பவான் கபில்தேவ் கூறியிருந்தார். ஆனால் அதே 2020 ஜனவரி 1 முதல் இந்தியாவுக்காக சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியல் இதோ:
1. ரோஹித் சர்மா : 746 (24 இன்னிங்ஸ்)
2. ஷ்ரேயஸ் ஐயர் : 705 (25 இன்னிங்ஸ்)
3. கேஎல் ராகுல் : 693 (21 இன்னிங்ஸ்)
4. விராட் கோலி : 675 (21 இன்னிங்ஸ்)
5. சூரியகுமார் யாதவ் : 537 (17 இன்னிங்ஸ்)

இங்கு கிட்டதட்ட முதலிடத்தில் இருக்கும் ரோகித் சர்மாவை ஈடு செய்யும் வகையில் ரன்கள் எடுத்துள்ள விராட் கோலி கேஎல் ராகுலை விட 18 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்துள்ளார். ஆனால் ராகுலை (36.47) விட அதிக சராசரியில் (42.18) எடுத்துள்ளார். இங்கு கேஎல் ராகுல் பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால் விராட் கோலியை பற்றி கேள்வி எழுப்புவது தான் ஆச்சரியமாக உள்ளது.

Advertisement