விராட் கோலியை அவுட் ஆக்கவேண்டும் என்றால் இதை செய்தே ஆகவேண்டும் – ஆஸி பவுலர்களுக்கு அட்வைஸ் கொடுத்த பிரட் லீ

Lee
- Advertisement -

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறாமல் இருந்தது. அதற்கு முடிவு கட்டும் விதமாக கடந்த எட்டாம் தேதி தான் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது கடந்த வாரம் துவங்கி தொடங்கி நடந்து வருகிறது.

Ind-lose

- Advertisement -

இந்நிலையில் இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்திய இந்திய வீரர்கள் மட்டுமின்றி உலக அளவில் இருக்கும் வீரர்களும் கிரிக்கெட் குறித்த தங்களது அனுபவங்களையும், வீரர்கள் குறித்த தங்களது தனிப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைதளம் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிரட் லீ இந்திய ஆஸ்திரேலிய தொடர் குறித்து தனது கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள இந்திய ஆஸ்திரேலிய தொடர் குறித்து அனைவரும் தங்களது கருத்துக்களை கூறிவரும் நிலையில் தற்போது இந்திய அணியின் கேப்டன் விராத் கோலியை கட்டுப்படுத்துவது குறித்து சில அட்வைஸ்களை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பிரெட் லீ வழங்கியுள்ளார்.

Kohli-2

இது குறித்து கூறுகையில் : விராட் கோலி கட்டுப்படுத்துவது ஆஸ்திரேலிய வீரர்கள் கடும் சவாலாக இருக்கும். நிச்சயம் அவர் ஒரு உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் அவரை கட்டுப்படுத்த வேண்டுமானால் அவருக்கான திட்டங்களை ஆஸ்திரேலிய வீரர்கள் சரியாக வகுக்க வேண்டும் மேலும் அவரை போட்டியின் துவக்கத்திலேயே நெருக்கடிக்குள்ளேயே வைத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இல்லை என்றால் அவர் உங்களை காலி செய்துவிடுவார். மேலும் அவருக்கு ரன் அடிக்க முடியாத இடத்தில் பீல்டர்களை நிறுத்தி அவரை எப்போதும் அழுத்தத்தில் வைத்திருக்கவேண்டும் கோலியை ஆடவிடாமல் டைட் செய்தல் மட்டுமே அவரை கட்டுப்படுத்த முடியும் மேலும் அவரது விக்கெட்டையும் எளிதாக வீழ்த்த முடியும் என்றும் பிரட் லீ கூறினார்.

indvsaus

இந்த தொடரில் நிச்சயம் சவால் அதிகம் இருக்கும் என்று கருதப்படுகிறது ஏனெனில் ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு இந்திய அணி டெஸ்ட் தொடரை 2 – 1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்ததால் இம்முறையும் டெஸ்ட் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி விளையாடும் அதே நேரத்தில் ஆஸ்திரேலிய அணியும் கடந்த தொடரில் தோல்வியை மனதில் வைத்து இந்த தொடரில் வெற்றி பெற்று அதன் மூலம் பழிதீர்க்க நினைக்கும் என்பதால் இன்று தொடர் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement