இவரது பேட்டிங் டெக்னீக் வேற லெவல். எவ்ளோ பால் போட்டாலும் இவரை அவுட் ஆக்குவது கஷ்டம் – பிரட் லீ புகழாரம்

Lee
- Advertisement -

இந்திய அணி பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் என்று அவ்வப்போது வர்ணிக்கப்படுவது வழக்கம். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அணியில் விரேந்தர் சேவக், சச்சின் டெண்டுல்கர், சௌரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமணன் என கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரர்கள் இருந்தனர். அப்போது இருந்த பந்து வீச்சாளர்களும் வேற லெவல் பந்துவீச்சாளராக இருந்தனர்.

Laxman

- Advertisement -

ஜேசன் கில்லஸ்பி, கிளன் மெக்ராத், சமிந்தா வாஸ் என பலர் ஜாம்பவான் பந்துவீச்சாளர்கள் இருந்தனர். ஆனால், இவர்களையெல்லாம் அடித்துப் பறக்க விட்டு அவர்களுக்கே தண்ணி காட்டியவர்கள் இந்திய பேட்ஸ்மேன்கள். இவர்களில் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் தான் விவிஎஸ்எஸ் லட்சுமனன். ஆஸ்திரேலியா என்றாலே அந்த அணிக்கு எதிராக தனித்துவமாக மிகச்சிறப்பாக ஆடுவதில் வல்லவர்.

இந்நிலையில் விவிஎஸ் லட்சுமணன் குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ புகழ்ந்து பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : நீங்கள் என்னதான் பந்து வீசினாலும் அவரது பேட்டை தாண்டி செல்வது கடினம் .அவரது டெக்னிக்கை உடைப்பது மிக மிக கடினம். அவர் பயப்படவே மாட்டார். அவர் ஆடும் போது அவருக்கு நிறைய நேரம் இருப்பது போன்று தெரியும். சிறப்பாக காலை நகர்த்தி ஆடுவார்.

Laxman

அவரிடம் ஒரு மிகவும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுத்தனம் இருக்கும். அதனை உடைத்து விட்டு அவரது விக்கெட்டை எடுப்பது மிகவும் கடினமானதாக இருக்கும். எந்த பந்து வீச்சாளர் என்றாலும் பயப்படாத ஒருவராக அவர் இருந்தார். ஆனால் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் தனித்துவமாக எதிர்கொண்டு ஆடுவதில் அவர் வல்லவர். அவருக்கு பந்து வீசுவது மிகவும் வேடிக்கையாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

பிரெட் லீயின் இந்த கருத்திற்கு இந்திய ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். மேலும் அவரின் இந்த பதிவு அதிக அளவில் பகிரப்படும் வருவது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் காரணமாக கிடைத்த இந்த ஓய்வு நேரத்தில் முன்னாள் வீரர்கள் பலரும் இதேபோன்று தங்களது கருத்துகளை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement