IPL 2023 : குஜராத் அணி அவரை நம்புறாங்க. அவரும் அசத்துறாரு. வயது மூத்த வீரரை புகழ்ந்த – பிரெட் லீ

Lee-GT
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-வது லீக் போட்டியானது நேற்று மதியம் அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ஹார்டிக் பாண்டியாவின் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது.

GT

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற லக்னோ அணியின் கேப்டன் க்ருனால் பாண்டியா தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய குஜராத் அணியானது துவக்கத்திலிருந்தே அதிரடி காட்ட நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் இரண்டு விக்கெட்டை மட்டுமே இழந்து 227 ரன்களை குவித்தது.

குஜராத் அணி சார்பாக துவக்க வீரர்கள் விரிதிமான் சாஹா 81 ரன்களையும், சுப்மன் கில் 94 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 228 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய லக்னோ அணியானது 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழந்து 171 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 56 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Saha 1

இந்நிலையில் இந்த போட்டியின் போது குஜராத் அணியின் துவக்க வீரரான விரிதிமான் சாஹா 43 பந்துகளில் 81 ரன்கள் அடித்தது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருகிறது. குறிப்பாக ஏற்கனவே இந்திய அணியின் முன்னாள் கேப்டனான விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாஹாவை வாழ்த்தியிருந்த வேளையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிரெட் லீ-யும் குஜராத் அணி சாஹாவை நம்பி தக்க வைத்தது சரியான முடிவு என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : குஜராத் டைட்டன்ஸ் அணியானது விரிதிமான் சாஹாவை மதித்து தக்கவைத்தது சரியான முடிவு. ஏனெனில் அவரை போன்ற ஒரு அனுபவ வீரர் எந்த ஒரு சூழ்நிலையும் சிறப்பாக விளையாடக் கூடியவர். அவர் விளையாடும் விதம் எனக்கு உண்மையிலேயே பிடித்திருக்கிறது. எந்தஒரு பயமும் இன்றி அவர் முதல் பந்தில் இருந்து குஜராத் அணிக்காக அதிரடியாக ஆடுகிறார் என பிரட் லீ கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : IPL 2023 : முடியலன்னா ரிட்டையர்ட் அவுட்டாகி போங்க, ஏன் சுயநலமா விளையாடுறிங்க – இளம் இந்திய வீரரை விளாசிய சைமன் டௌல்

குஜராத் அணியில் பெரும்பாலும் இளம் வீரர்களே நிறைந்திருக்கும் வேளையில் அந்த அணியில் மூத்த வீரராக 38 வயது நிரம்பிய விரிதிமான் சாஹாவை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர்மீது நம்பிக்கை வைத்து தொடர்ச்சியாக ஹார்டிக் பாண்டியா வாய்ப்பளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement