- Advertisement -
இந்திய கிரிக்கெட்

திரும்ப வந்துட்டார்ன்னு நினச்சேன்.. ஆனா கிரேட் விராட் கோலி இப்படி செய்வாருன்னு நினைக்கல.. பிரட் லீ ஏமாற்றம்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. அதனால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது. அந்த தோல்விக்கு பேட்டிங் துறையின் முதுகெலும்பான விராட் கோலி சுமாராக விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. இந்நிலையில் அந்தத் தொடரின் முதல் போட்டியிலேயே சதத்தை அடித்ததால் விராட் கோலி ஃபார்முக்கு வந்து விட்டார் என்று நினைத்ததாக பிரட் லீ தெரிவித்துள்ளார்.

ஆனால் அதற்கடுத்த போட்டிகளில் அவர் சுமாராக விளையாடியது தமக்கு ஏமாற்றமளிப்பதாக பிரட் லீ கூறியுள்ளார். குறிப்பாக கிரேட் பேட்ஸ்மேனாக இருந்தும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்துகளில் ஒரே மாதிரியாக விராட் கோலி அவுட்டானது பெரிய ஏமாற்றம் என்று அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

ஏமாற்றிய கோலி:

“எனக்கு இந்த தொடரில் வழக்கமான விராட் கோலி தெரியவில்லை. பொதுவாகவே பேட்ஸ்மேன்கள் எட்ஜ் கொடுத்து விக்கெட்டை வழங்குவது வழக்கமாகும். ஆனால் அதை சரி செய்ய அவர்கள் தங்களுடைய ஆட்டத்தில் ஏதேனும் டெக்னிக்கல் மாற்றங்களை செய்வார்கள். இருப்பினும் விராட் கோலி ஒரே மாதிரியாக மொத்த தொடரிலும் அவுட்டானார்”

“முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் அதே போலவே அவுட்டானார். இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் அற்புதமான சதத்தை அடித்த அவர் மீண்டும் வந்து விட்டதாக நினைத்தோம். ஆனால் அதன் பின் விராட் கோலியிடம் மெலிதான ஆட்டங்கள் மட்டுமே இருந்தன. அதே சமயம் ஆஸ்திரேலியாவும் அவருக்கு எதிராக நன்றாக ஆராய்ந்து திட்டங்களை செயல்படுத்தியது என்று நினைக்கிறேன்”

- Advertisement -

ஒரே மாதிரியாக:

“அவருக்கு எதிராக ஆஸ்திரேலிய அணியின் திட்டங்கள் அபாரமாக இருந்தன. ஆனால் விராட் கோலி அந்த ஒரு ஆட்டத்தை தவிர்த்து மற்றவற்றை தவற விட்டார். அவர்கள் மனதளவில் தயாராகவில்லை என்றும் நான் நினைக்கவில்லை. குறிப்பாக விராட் கோலியை விட ரோஹித் சர்மாவை சொல்லலாம். ஆனால் விராட் கோலியை நான் தொடர் முழுவதும் முழுமையாக பார்த்தேன்”

இதையும் படிங்க: இந்திய ரசிகர்கள் ஏன் இவ்ளோ விஷமாகிட்டாங்க? சச்சின், ட்ராவிட், கும்ப்ளே வைத்து அஸ்வின் ஆதங்க பேட்டி

“அவர் கிரேட் பேட்ஸ்மேனாக வருவதற்கு செய்த அனைத்து திறன் மற்றும் ஆட்டங்களை தமக்கு தாமே செலுத்தி விளையாட முயற்சித்தார். இப்போதும் அவர் கிரேட் பேட்ஸ்மேன் தான். ஆனால் துரதஷ்டவசமாக அவரால் இத்தொடரில் ரன்கள் அடிக்க முடியவில்லை” என்று கூறினார். இதை அடுத்து சாம்பியன்ஸ் டிராபியில் விராட் கோலி அசத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

- Advertisement -