அவர் சூப்பர்ஸ்டார், சச்சினை விட அவருக்கு பந்துவீச கஷ்டப்பட்டேன் – இந்திய ஜாம்பவானை மனதார பாராட்டும் பிரட் லீ ஓப்பன்டாக்

Lee
- Advertisement -

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர முன்னாள் வீரர் பிரெட் லீ வரலாறு கண்ட மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார். தனது அதிரடியான வேகப்பந்துகளால் சச்சின் டெண்டுல்கர், பிரைன் லாரா, ஜாக் காலிஸ் உட்பட உலகின் அத்தனை உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களையம் திணறடித்த அவர் நிறைய இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உத்வேகத்தை கொடுப்பவராக திகழ்கிறார். அதிலும் இவரும் இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரும் 1998 மெல்போர்ன் டெஸ்ட், 2003 உலக கோப்பை மற்றும் 2008 முத்தரப்பு தொடர் போன்ற போட்டிகளில் நேருக்கு நேர் மோதியது ரசிகர்களால் மறக்க முடியாது.

lee 2

அதில் தனது பந்துகளில் பலமுறை பவுண்டரிகளை பறக்கவிட்ட சச்சினை 14 முறை அவர் செய்த பெருமைக்குரிய இவர் வரலாற்றில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாகவே செயல்பட்டுள்ளார். அந்த வகையில் நிறைய இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறப்பாக பந்து வீசிய இவர் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை விட அதிரடியாக விளையாட கூடிய வீரேந்திர சேவாக்க்கு பந்து வீசுவது கடினமாக இருந்ததாக வெளிப்படையாக பேசியுள்ளார். பொதுவாகவே போட்டியின் முதல் பந்திலிருந்தே அதிரடியாக விளையாட கூடிய வீரேந்திர சேவாக் ஒரு பந்து வீச்சாளர்கள் செட்டாவதற்கு முன்பாகவே அதிரடியை ஆரம்பித்து மனதளவில் அவர்களை வீழ்த்தும் திறமை பெற்றவர் என்று பிரட் லீ பாராட்டியுள்ளார்.

- Advertisement -

மிரட்டலான சேவாக்:
கடந்த 2003இல் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் பிரட் லீ, கிளென் மெக்ராத் போன்ற தரமான பவுலர்களையும் அசால்டாக எதிர்கொண்ட வீரேந்திர சேவாக் முதல் நாளிலேயே 195 ரன்கள் விளாசியதை யாருமே மறக்க முடியாது. அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டாக இருந்தாலும் பொறுமையாக விளையாடாமல் முதல் பந்திலிருந்தே சிக்ஸர் அடிக்க வேண்டும் என்று நினைக்கக்கூடிய அவர் சச்சினுக்கு நிகரான திறமை பெற்றவர் என்ற பாராட்டியுள்ள பிரட்லீ இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

Sehwag 1

“நீங்கள் கொடூரம் என்ற வார்த்தையை நினைத்து பாருங்கள். அதிரடி என்ற வார்த்தையை நினைத்து பாருங்கள். கணிக்க முடியாத உலகத்தை சிந்தித்துப் பாருங்கள். ஆனால் நான் விரேந்திர சேவாக் தவிர வேறு யாரையும் நினைக்கவில்லை. அவர் எப்போதுமே முகத்தில் புன்னகையுடன் அதிரடி காட்டுவார். அவர் டெஸ்ட் போட்டியிலும் கூட முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்கவிட நினைப்பவர். அதை செய்தும் காட்டியுள்ளார். அவர் எப்போதுமே பவுலர்களுக்கு கருணை காட்டாமல் கணிக்க முடியாத வகையில் அதிரடி காட்டுவார். நீங்கள் சரியான லைன் மற்றும் லென்த்தில் அழகாக பந்து வீசினோம் என்று நினைக்கலாம். ஆனால் மிகப்பெரிய புன்னகையுடன் கவர் திசைக்கு மேல் அவர் பிரம்மாண்ட சிக்சராக உங்களை அடிப்பார்”

- Advertisement -

“அவர் பேட்டிங் செய்யும் போது சச்சின் டெண்டுல்கரை சற்று பிரதிபலிப்பார். அதனால் “இதோ மற்றொரு சச்சின் வந்துவிட்டார், ஒரு சச்சினையே சமாளிக்க முடியாது ஆனால் இங்கு மற்றொருவர் அவருடன் ஓபனிங் வீரராக களமிறங்குகிறார்” என்று நினைத்திருக்கிறேன். ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கு முன்பாக எங்களது ஆஸ்திரேலிய அணியில் அவரை விரைவில் அவுட் செய்வதற்காக தேர்ட் மேன் திசையில் ஒரு ஃபீல்டரை நிறுத்துவோம்”

Lee

“ஆனால் அசால்டாக அவர் கீழ்நோக்கி சிக்ஸர் அடிப்பார். அதை ஒருநாள் கிரிக்கெட்டில் முயற்சித்த எங்களுக்கு மீண்டும் அடிதான் கிடைத்தது. அதனால் இவர் மிகச்சிறந்த ஒருவர் என்று நான் பலமுறை நினைத்திருக்கிறேன். மேலும் அவர் பவுலர்களை அடித்துவிட்டு சிரித்தவாறே கண்ணடிப்பார். அந்த வகையில் சேவாக் என்ற கேரக்டரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக போட்டி போட்டு விளையாடி ரசிகர்களை நாற்காலியில் அமர்ந்து தொடர்ச்சியாக போட்டியை பார்க்க வைப்பார்” என்று கூறினார்.

சூப்பர்ஸ்டார் சேவாக்:
அந்தளவுக்கு அதிரடி காட்டக்கூடிய வீரேந்திர சேவாக் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் ஆபத்தானவர் என்று தெரிவிக்கும் பிரட் லீ அவரை சூப்பர் ஸ்டார் என்றும் மனதார பாராட்டியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நிறைய பேர் என்னிடம் சேவாக் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஆபத்தானவர் என்று கூறுவார்கள். ஆனால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மிகவும் பொருத்தமானவர் என்று நான் கூறுவேன்”

Sehwag

“ஏனெனில் டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் நீங்கள் நல்ல லைனை தேடி பந்து வீசுவீர்கள். ஆனால் எந்த பவுலர் என்று பாராமல் முதல் பந்திலேயே அவர் பவுண்டரியை பறக்க விடுவார். களத்தில் நிறைய போட்டிகளில் அவருடன் மோதிய நான் களத்துக்கு வெளியே நண்பராகவே உள்ளேன். வீரேந்திர சேவாக் நீங்கள் எப்போதுமே சூப்பர் ஸ்டார், உங்களது பேட்டிங்கை வருங்காலங்களில் நிறைய வீரர்கள் வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்” என பாராட்டினார்.

Advertisement