- Advertisement -
உலக கிரிக்கெட்

எந்தவொரு வீரரும் நிகழ்த்தாத வரலாற்று சாதனையை நிகழ்த்தி அசத்திய ஜிம்பாப்வே வீரர் – பிரெண்டன் டெய்லர்

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் 2026-ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு நாளைக்கு மூன்று போட்டிகள் வீதம் தொடர்ச்சியாக நடைபெற்று ரசிகர்களை மகிழ்வித்து வரும் வேளையில் நேற்று மூன்று போட்டிகள் நடைபெற்றன. அப்படி நடைபெற்ற இந்த லீக் சுற்று போட்டியின் எட்டாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வே மற்றும் ஓமன் அணிகள் மோதின.

டி20 உலககோப்பையில் வரலாற்று சாதனையை நிகழ்த்திய ஜிம்பாப்வே வீரர் :

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஓமன் அணி ஜிம்பாப்வே அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே குவித்தது.

- Advertisement -

பின்னர் 104 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஜிம்பாப்வே அணி 11.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 106 ரன்கள் குவித்து 8 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பிரெண்டன் டைலர் சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.

அதிலும் குறிப்பாக அவர் இந்த உலக சாதனையை டி20 உலக கோப்பை தொடரில் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2006-ஆம் ஆண்டு டி20 போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 59 ஆட்டங்களில் விளையாடியிருந்தாலும் 2007-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய அவர் தற்போது 2026 டி20 தொடரிலும் விளையாடி உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : தரமிறக்கப்பட்ட விராட் கோலி, ரோஹித் சர்மா.. இஷான் கிஷனுக்கு இடமில்லை – வெளியான ஊதிய ஒப்பந்த பட்டியல்

இதன்மூலம் 2007 டி20 உலக கோப்பை தொடர் மற்றும் தற்போதைய 2026 டி20 உலக கோப்பை தொடர் இரண்டிலும் விளையாடிய முதல் மற்றும் ஒரே வீரர் என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளார். நேற்றைய ஓமன் அணிக்கெதிரான போட்டியில் அவர் 31 ரன்கள் எடுத்திருந்தபோது தசைப்பிடிப்பு காரணமாக வெளியேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -