வரும் ஐபிஎல் ல கோலி யாரை நம்புகிறாரு தெரியுமா ? – புகைப்படம் உள்ளே

branden
- Advertisement -

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் கேப்டன் விராட்கோலியின் நம்பிக்கைக்குரிய நபர் மெக்கல்லம் என அந்த அணியின் பயிற்சியாளர் வெட்டோரி தெரிவித்துள்ளார்.ஐபிஎல் போட்டி தொடங்க இன்னும் மூன்று தினங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில் ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்கள் அனைவரும் கடுமையான இறுதிகட்ட பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Virat

- Advertisement -

ஐபிஎல்-இல் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்று பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி. என்னதான் பலம்வாய்ந்த அணியாக இருந்தாலும் இதுவரை நடந்த சீசன்களில் ஒருமுறை கூட பெங்களூரு அணி கோப்பையை வென்றது இல்லை. இம்முறை கோலி தலைமையிலான பெங்களூரு அணி எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்கிற முனைப்பில் விளையாடிடும்.

அந்த அணியின் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி கேப்டன் கோலிக்கு அடுத்து அதிகம் நம்பியுள்ள மற்றொரு வீரர் மெக்கல்லம். அனுபவம் வாய்ந்த அதிரடி தொடக்க ஆட்டக்காரரான மெக்கல்லம் தனது வானவேடிக்கையை காட்ட தொடங்கிவிட்டால் நிச்சயம் வெற்றிபெற்று விடலாம் என்று நம்புபவர்.சென்ற ஐபிஎல் சீசனில் மற்ற அணிகளை விட அதிக நட்சத்திர வீரர்களை கொண்டிருந்தாலும் பெரிதும் சோபிக்கமுடியாமல் படுதோல்விகளை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.

Mccullum

அதனால் இந்தமுறை மெக்கல்லமை ஏலத்தில் எடுத்துள்ளது ஒட்டுமொத்த அணிக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாம். ஏற்கனவே டி வில்லியர்ஸ், விராட்கோலி போன்ற பலமான வீரர்கள் அணியில் இருக்கும்போது மேலும் மெக்கல்லம் அணியில் இணைந்திருப்பது பெங்களூரு அணிக்கு கூடுதல் பலம் என்கிறார் வெட்டோரி.

அவர் மேலும் பேசுகையில்,எங்கள் அணியில் அதிக சிறந்த தலைவர்கள் உள்ளதாக நினைக்கிறோம். விராட்கோலி, மெக்கல்லம், டி வில்லியர்ஸ், பிராண்டன், பார்த்தீவ் பட்டேல், குயிண்டன் டி காக் போன்ற வீரர்கள் நல்ல தலைவர்களும் கூட. இவர்கள் மட்டுமில்லாமல் வளரும் இளம் வீரர்களான வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களின் சமீபத்திய பார்மும் இந்த ஐபிஎல்-இல் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல நிச்சயம் உதவிடும் என்றார்.

Advertisement