ஒரு நாளில் எனவாழ்க்கை மாறியது இந்தியாவில் நடந்த இந்த போட்டி மூலம்தான் – மனதிறந்த மெக்கல்லம்

Mccullum
- Advertisement -

ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து ரசிகர்களின் பெரும் ஆதரவோடு டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2007ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் துவங்கப்பட்டது. மூன்று மணி நேரத்தில் இந்த போட்டியில் முடிவடைந்ததால் டி20 கிரிக்கெட்டிற்கு மவுசு அதிகரித்து. மேலும் ரசிகர்கள் அனைவரும் வீரர்களின் அதிரடி ஆட்டத்தினை விரும்பி பார்பதினால் டி20 போட்டிகளை காண வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

ipln

- Advertisement -

இதன் காரணமாக இந்தியாவில் 8 அணிகளை கொண்டு இந்தியன் பிரீமியர் லீக் என 2008 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உள்ளூர் வெளியூர் என அனைத்து வீரர்களையும் சேர்த்து 8 அணிகளும் போட்டி போட்டு ஏலம் எடுத்து தங்களது அணிகளை கட்டமைத்தனர். இந்த தொடரின் முதல் போட்டி கொல்கத்தா மைதானத்தில் கொல்கத்தா மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடந்தது.

இந்த தொடருக்கு இந்திய ரசிகர்களின் ஆதரவு கிடைக்குமா என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த போட்டியில் கொல்கத்தா அணியை சேர்ந்த பிரன்டன் மெக்கல்லம் ருத்ர தாண்டவம் ஆடி 73 பந்துகளில் 158 ரன்கள் குவித்தார். இந்த அதிரடி ஐபிஎல் தொடரை மிகவும் பிரபலப்படுத்த முக்கிய காரணமாக அமைந்தது என்று கூறினால் மிகையாகாது. இதுகுறித்து தற்போது பிரமிப்பாக பேசியுள்ளார் பிரண்டன் மெக்கல்லம். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ஆனால் அந்தப் போட்டிக்கு பின்னர் நடந்த பல விஷயங்களை பற்றி கூற முடியாது. ஆனால் நான் நினைவில் வைத்திருப்பதை கூறுகிறேன். என்னிடம் வந்து ஒரே நாளில் உங்களது வாழ்க்கை மாறிவிட்டது என்று கூறினார் கங்குலி. ஆனால் அதற்கான அர்த்தம் அந்த நேரத்தில் தெரியவில்லை. தற்போது நான் அதை நினைத்து பார்க்கையில் 100% ஒப்புக்கொள்கிறேன்.

கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் எப்போதும் இருப்பீர்கள் என்று உறுதியளித்தார். தற்போது நான் மீண்டும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக திரும்புவது எனது நினைவுகளை ஞாபகப்படுத்தியது என்று கூறியுள்ளார் பிரண்டன் மெக்கல்லம்.

Advertisement