
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தற்சமயத்தில் ரசிகர்களிடம் விமர்சனங்களை சந்தித்து வருகிறார். ஏனெனில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவரது தலைமையில் இந்திய அணி டி20 கிரிக்கெட்டில் அசத்தி வருகிறது. ஆனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கையிடம் 27 வருடங்கள் கழித்து தோற்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் நியூசிலாந்திடம் வரலாறு காணாத ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்தது.
அடுத்ததாக நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரிலும் தோற்ற இந்தியா 10 வருடங்கள் கழித்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையை விட்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் வெளியேறியது. அந்த தோல்விக்கு கம்பீர் ஒரு காரணமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஏனெனில் அவருடைய பிளேயிங் லெவன் தேர்வு நன்றாக இல்லை.
அது போக அடுத்தடுத்த தோல்விகளால் இந்திய வீரர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் செய்திகள் காணப்படுகின்றன. இந்நிலையில் கௌதம் கம்பீர் தம்முடைய வழியில் அணியை வழி நடத்துவதாக இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் ப்ரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார். எனவே ஆரம்பத்தில் சில இடர்பாடுகள் இருந்தாலும் விரைவில் கம்பீர் தலைமையில் இந்திய அணி வெற்றிகளைப் பெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி இந்தியா – இங்கிலாந்து டி20 தொடருக்கு முன் அவர் பேசியது பின்வருமாறு. “அவருடன் இதற்கு முன் வேலை செய்துள்ளதால் கௌதம் கம்பீர் சிறந்த லீடர் என்று நான் சொல்வேன். அவர் ஆடவர்களின் வலுவான லீடர். இதற்கு முன் வகித்த பதவிகளில் அவரால் வெற்றிகரமாக செயல்பட முடிந்தது. அவர் இந்த அணியுடன் மட்டுமே இருக்கிறார். தமக்கு கிடைத்துள்ள திறமையான வீரர்களை வைத்து அவர் சிறந்தவராக இருப்பார் என்பதில் சந்தேகம் இல்லை”
“பயிற்சியாளர்கள் என்றாலே வீரர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதில் தங்களுடைய சொந்த வழியை கண்டறிய வேண்டும். சில நேரங்களில் எங்களைப் பயிற்சியாளர்கள் என்று சொல்வது சரியான வார்த்தையா என்றும் எனக்கு தெரியாது. ஏனெனில் ஒவ்வொருவரும் விஷயங்களை வித்தியாசமாக செய்வார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்துவமான அணுகுமுறை இருக்கும்”
இதையும் படிங்க: திருமணத்துக்கு முன் தனது தந்தையை பைக்கில் ஹீரோவாக அழகு பார்த்த ரிங்கு.. விலை எவ்வளவு தெரியுமா?
“சில பயிற்சியாளர்கள் தங்கள் வழியில் வீரர்களை அசவுகரியமற்ற சூழ்நிலைகளுக்குள் தள்ளி வெற்றிகளை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பார்கள். இன்னும் சில பயிற்சியாளர்கள் கொஞ்சம் வித்தியாசமாக டெக்னிக்கல் அடிப்படையில் செயல்படுவார்கள். மற்ற பயிற்சியாளர்கள் தங்கள் வழியில் கொஞ்சம் கண்டிப்புடன் இருக்கலாம். அந்த வகையில் இவை அனைத்துமே வித்தியாசமானது” என்று கூறினார்.