திருமணத்துக்கு முன் தனது தந்தையை பைக்கில் ஹீரோவாக அழகு பார்த்த ரிங்கு.. விலை எவ்வளவு தெரியுமா?

Rinku Singh
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் ரிங்கு சிங் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார். 2023 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக கடைசி 5 பந்துகளில் 5 சிக்ஸர் அடித்து அனைவரது கவனத்தை ஈர்த்த அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் இதுவரை டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அவர் நன்றாக விளையாடி வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்.

அதனால் தோனிக்கு பின் நல்ல ஃபினிஷர் கிடைத்துள்ளதாக நிறைய ரசிகர்களும் அவரை பாராட்டினர். அதன் காரணமாக கடந்த வருடம் வெறும் 55 லட்சத்திற்கு விளையாடிய அவரை தற்போது கொல்கத்தா அணி 13 கோடிக்கு தக்க வைத்துள்ளது. அத்துடன் 55 லட்சம் சம்பளமாக வாங்கிய போதே தாம் வளர்வதற்கு உதவிய விடுதிக்கு ரிங்கு பெரிய தொகையை நன்கொடையாக வழங்கியிருந்தார்.

- Advertisement -

அப்பாவை ஹீரோவாக:

இந்நிலையில் தம்மை வளர்த்த தந்தைக்கு ரிங்கு சிங் புதிய பைக் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவருடைய தந்தை சிலிண்டர்கள் விநியோகம் செய்யும் வேலையை செய்து வருகிறார். தம்முடைய மகன் கிரிக்கெட்டில் சாதித்த போதிலும் பழைய விஷயங்களை மறக்காத அவர் இப்போதும் அதே வேலையை செய்து வருகிறார்.

அந்த வகையில் அன்றும் இன்றும் குடும்பத்திற்காக உழைத்து வரும் தம்முடைய அப்பாவுக்கு 3.19 லட்சம் மதிப்பிலான கவாஸ்சகி நிஞ்ஜா பைக்கை ரிங்கு சிங் பரிசாக கொடுத்துள்ளார். அந்த பைக்கில் தம்முடைய தந்தை வலம் வரும் வீடியோவையும் “ஹீரோ” என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் ரிங்கு பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தம்முடைய தந்தையை அவர் ஹீரோவாக அழகு பார்த்தது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைக்கிறது.

- Advertisement -

அடுத்து திருமணம்:

இதற்கிடையே அவருக்கும் பிரியா சரோஜ் என்ற பெண்ணுக்கும் விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் காணப்படுகின்றன. உத்திரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சியில் பிரியா சரோஜ் எம்பியாக இருந்து வருகிறார். அவருக்கும் ரிங்குவுக்கும் திருமணம் பற்றி இரு குடும்பத்தினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: இன்னும் 10 வருஷத்தில் தோனி, ரோஹித்துடன் இருப்பாரு.. லக்னோ ஓனர், ரிஷப் பண்ட் பேட்டி

குறிப்பாக அவர்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள் என்பது தெரிய வருகிறது. எனவே இரண்டு குடும்பத்தின் சம்மதத்தை பெற்று அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.

Advertisement