- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த 3ம் ராக்கெட் மாதிரி இருக்கு.. டி20 தொடரில் பஸ்பால் இந்தியாவை நொறுக்கும்.. மெக்கல்லம் அதிரடி

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. சூரியகுமார் தலைமையில் சமீபத்தில் இலங்கை, வங்கதேசம், தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் இந்தியா அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றது. எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் இந்தியா இந்தத் தொடரில் சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்த தயாராகியுள்ளது.

மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல விளையாடும் அணுகுமுறையை இங்கிலாந்து அணியில் அறிமுகப்படுத்திய ப்ரெண்டன் மெக்கல்லம் தற்போது வெள்ளைப்பந்து அணியின் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இத்தொடரில் இங்கிலாந்து அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். குறிப்பாக தங்களிடம் பேட்டிங், ஃபீல்டிங் மற்றும் பவுலிங் ராக்கெட் போல இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

ராக்கெட் இங்கிலாந்து:

இது பற்றி மெக்கல்லம் பேசியது பின்வருமாறு. “கண்டிப்பாக நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றியைப் பெற்று வெற்றிகரமாக செயல்பட முயற்சிக்கிறோம். அது தான் எங்களுடைய இலக்காகும். அதற்காக அணிக்குள் எங்களுடைய மொழி மற்றும் விவாதங்கள் வித்தியாசமாக இருக்கும். இது எங்களுடைய அணியின் திறமையிலிருந்து சிறந்த செயல்பாடுகளை கொண்டு வர முயற்சிப்பதை பற்றியதாகும்”

“அது நமக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்கும் சிறந்த கிரிக்கெட்டின் ஸ்டைலை விளையாட எங்களுடைய வீரர்களை உட்படுத்துவதை பற்றியதாகும். நான் உற்சாகத்துடன் பார்க்கும் கிரிக்கெட்டின் பிராண்டை எங்கள் அணி விளையாடுவதை விரும்புகிறேன். அதற்கான திறமை இருப்பதால் எங்களால் அதை விளையாட முடியாது என்பதற்கான காரணம் இல்லை”

- Advertisement -

பஸ்பால் இஸ் பேக்:

“உலகிலேயே மிகவும் பவர் ஃபுல்லான பேட்டிங் வரிசை எங்களிடம் இருக்கிறது. எங்களிடம் துப்பாக்கியை போன்ற ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். ராக்கெட் போல பந்துகளை வீசும் தரமான ஃபீல்டர்களும் எங்களிடம் உள்ளார்கள். அந்த வகையில் களத்தில் பொழுதுபோக்கை உண்டாக்கி வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய அணி எங்களிடம் இருக்கிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: டெஸ்டில் இந்தியா ஜெய்க்க இதை செய்யனும்.. சாம்பியன்ஸ் ட்ராபியில் ரோஹித் அசத்துவாரு.. கங்குலி உறுதி

இதைத் தொடர்ந்து இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தப் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெறுவதற்கு இந்திய அணியினர் தயாராகி வருகிறார்கள். என்ன தான் சொந்த மண்ணில் விளையாடினாலும் அதிரடியான வீரர்களை கொண்டுள்ள இங்கிலாந்தின் சவாலை சமாளித்து இந்தியா வெல்லுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

- Advertisement -