ஐ.பி.எல் 2022 : மலிங்காவின் மெகா சாதனையை முறியடித்து வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் – பிராவோ

Bravo
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரின் முதலாவது லீக் போட்டியில் ஜடேஜா தலைமையிலான சிஎஸ்கே அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர். நடப்புச் சாம்பியனான சிஎஸ்கே முதல் போட்டியில் இருந்து தங்களது வெற்றிக்கும் கணக்கை துவங்கும் முனைப்பில் உள்ளது.

CSKvsKKR

- Advertisement -

அதேபோன்று கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக தற்போது கொல்கத்தா அணியும் சென்னை அணியை வீழ்த்த மும்முரமாக பயிற்சிகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்த முதல் போட்டியே மிகுந்த சுவாரசியத்தை ஏற்படுத்தும் போட்டியாக இருக்கலாம்.

நாளை துவங்க உள்ள இந்த ஐபிஎல் தொடரானது அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரசிகர்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கை வழங்கும் என்பது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் மீண்டும் சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரான பிராவோ ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய சாதனை ஒன்றினை முறியடிக்க காத்திருக்கிறார்.

Bravo

அதன்படி இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இலங்கை அணியை சேர்ந்த முன்னாள் வீரரான மலிங்கா உள்ளார். மும்பை அணிக்காக 11 சீசன்கள் விளையாடி அவர் 122 இன்னிங்ஸ்களில் 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதுவே ஐபிஎல் தொடரில் ஒரு பவுலர் எடுத்த அதிக விக்கெட்டுகளாக இருக்கிறார்.

- Advertisement -

அவரைத் தொடர்ந்து பிராவோ 3 விக்கெட்டுகள் மட்டும் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இடத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த சீசனில் அவர் மூன்றுக்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தும் போது மலிங்காவின் வரலாற்று சாதனையை முறியடித்து ஐ.பி.எல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை அடைய பிரகாசமான வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : இந்திய வீரர்களான அவங்க 2 பேருக்கு எதிரா மட்டும் லூஸ் பால் போடவே கூடாது ரஷீத் கான் ஓபன்டாக்

இதுவரை ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதலிடத்தில் மலிங்கா 170 விக்கெட்டுக்களுடனும், 167 விக்கெட்டுகளுடன் பிராவோ இரண்டாவது இடத்தில் உள்ளனர். மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா 166 விக்கெட்டுகளுடனும், அவரை தொடர்ந்து பியூஷ் சாவ்லா 157 விக்கெட்டுகள் உடன் நான்காவது இடத்திலும், ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுக்கள் உடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement