இந்திய வீரர்களான அவங்க 2 பேருக்கு எதிரா மட்டும் லூஸ் பால் போடவே கூடாது ரஷீத் கான் ஓபன்டாக்

Rashid-khan
- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கான் சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமின்றி உலகெங்கிலும் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட்டிலும் நம்பர் 1 பவுலராக திகழ்ந்து வருகிறார். தற்போதைய மாடர்ன் டே கிரிக்கெட்டின் மிகச்சிறந்த பந்து வீச்சாளராக பார்க்கப்படும் ரஷீத் கான் இளம் வயதிலேயே மிகப் பெரிய புகழை எட்டியுள்ளார். அவரது பந்து வீச்சுக்கு எதிராக எந்த ஒரு பேட்ஸ்மேனும் ரன் குவிப்பது மிகவும் கடினம் என்பது நாம் அறிந்ததே.

Rashid

- Advertisement -

அந்த வகையில் ஐபிஎல் தொடரிலும் கடந்த பல ஆண்டுகளாக சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய அங்கமாக இருந்து வந்த ரஷித் கான் தற்போது அந்த அணியில் இருந்து வெளியேறி குஜராத் அணியில் இந்த பதினைந்தாவது ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கிறார்.

இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீரர்களான ரிஷப் பண்ட் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு எதிராக மட்டும் லூஸ் பந்துகளை வீசி விடக்கூடாது என்று தனது வெளிப்படையான கருத்தினை அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட்டின் மிகவும் ஸ்ட்ராங்கான இடம் மற்றும் வீக்கான இடம் ஆகிய இரண்டும் எனக்கு தெரியும். எனவே அவருக்கு எதிராக எப்போதும் ஒரு திட்டத்துடன் பந்து வீசுவேன்.

iyer 1

அதேபோன்று ஷ்ரேயாஸ் ஐயருக்கு எதிராகவும் சரியான முறையில் திட்டமிட்டு பந்து வீசுவேன். இவர்கள் இருவரிடமும் கொஞ்சம் கூட லூஸ் டெலிவரிகளை வீசக் கூடாது. ஏனெனில் எப்போது ஆட்டத்தில் லூஸ் டெலிவரி கிடைத்தாலும் அதனை பயன்படுத்தி ரன்களை குவிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட பேட்ஸ்மேன்களான அவர்கள் நிச்சயம் அது போன்ற லூஸ் டெலிவரிகள் கிடைத்தால் ரன்களை குவித்து போட்டியில் ஆதிக்கம் செலுத்த தொடங்கி விடுவார்கள்.

- Advertisement -

எனவே அவர்கள் இருவரும் பேட்டிங் செய்யும் போது மட்டும் நான் ஆரம்பத்திலிருந்தே சரியான திட்டத்துடன் என்னுடைய சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்துவேன் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : அடுத்த ஆண்டு கண்டிப்பா தோனி ஐ.பி.எல் தொடரில் ஆடமாட்டார். காரணத்தோடு சொன்ன – ஆகாஷ் சோப்ரா

அவர்களுக்கு எதிராக சரியான லென்த் மற்றும் சரியான லைன் ஆகியவற்றில் பந்து வீசினால் மட்டுமே அவர்களை தடுத்து நிறுத்த முடியும். இல்லை என்றால் அவர்கள் பவுலர்கள் மீது தங்களது ஆதிக்கத்தை செலுத்தி விடுவார்கள் என்று ரஷீத் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement