கேதார் ஜாதவ்க்கு எதுக்கு பேட்டிங் தந்தீங்க ? அவருக்கு பதிலா இவர் இறங்கி இருந்தா ஈஸியா ஜெயிச்சிருக்கலாம் – விவரம் இதோ

Jadhav-1
- Advertisement -

ஐபிஎல் தொடரின் 21 ஆவது லீக் போட்டி நேற்று அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் கணேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களை குவித்தது.

- Advertisement -

அதிகபட்சமாக தொடக்க வீரர் ராகுல் திரிப்பாதி 51 பந்துகளில் 81 ரன்களை குவித்து அசத்தினார். சென்னை அணி சார்பாக பிராவோ 4 ஓவர்கள் வீசி 37 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முதல் 12 வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. துவக்க வீரர் வாட்சன் 50 ரன்களும் அம்பத்தி ராயுடு 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதுவரை சென்னை அணி வெற்றி பெறும் என்றே அனைவரும் நினைத்திருந்தனர். ஆனால் அதன் பிறகு வழக்கம்போல தோனி, சாம்கரன், கேதார் ஜாதவ் என அனைவரும் பேட்டிங்கில் சொதப்ப இறுதியில் ஜடேஜா 8 பந்துகளில் 27 ரன்கள் குவித்தார். இதனால் 20 ஓவர்களில் சென்னை அணி 5 விக்கெட்களை இழந்து 157 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ராகுல் திரிப்பாதி தேர்வானார்.

jadhav

நேற்றைய போட்டியில் எளிமையான கட்டத்தில் வெற்றி வாய்ப்பு அருகில் இருந்த நிலையில் தோனி 17-வது ஓவரில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு கேதர் ஜாதவ் களமிறங்கி 12 பந்துகளில் 7 ரன்கள் அடித்து அணியின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தார். அவரது இந்த மோசமான ஆட்டம் பேட்டி தற்போது ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

மேலும் அவருக்கு பதிலாக அந்த இடத்தில் பிராவோ இறங்கி இருந்தால் நிச்சயம் நமக்கு வெற்றி கிடைத்திருக்கும். ஏனெனில் 2018 ஆம் ஆண்டு துவக்க போட்டியிலும் இதே போன்று ஒரு சூழ்நிலையில் பிராவோ சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுக் கொடுத்தார். மேலும் நேற்றைய போட்டியிலும் அவரால் நிச்சயம் அதிரடியாக ஆடி இருக்க முடியும்.

அப்படி ஒரு வீரர் இருக்கையில் ஜாதவை எதற்கு இறக்க வேண்டும் ? என்று தோனியின் மீது சிலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். மேலும் கேதர் ஜாதவ் இனி சி.எஸ்.கே அணிக்கு செட்டாக மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக வேறு ஒரு வாய்ப்பு வழங்கலாம் என்றும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளம் மூலமாக பகிரங்கமாக ரசிகர்கள் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement