தோனி இந்த விஷயத்தை பத்தி கவலைப்படவே வேணாம். ரிலாக்ஸா ஆடலாம் – லாரா ஓபன் டாக்

Lara
- Advertisement -

நேற்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டனர். இதில் முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 188 ரன்கள் எடுத்தது. பின்னர் களையும் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 143 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி இந்த வெற்றியின் மூலம் அவர்கள் இந்த தொடரில் 2 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளனர்.

csk vs rr

- Advertisement -

முதல் போட்டியில் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்த மகேந்திர சிங் தோனி இரண்டாவது போட்டியில் பேட்டிங் ஆடவில்லை. இந்நிலையில் நேற்றைய போட்டியில் அவர் களமிறங்கினார். நிச்சயமாக பெரிய ஸ்கோர் அடிக்கப் போகிறார் என்று எதிர்பார்த்த நிலையில் 15 பந்துகளில் வெறும் 18 ரன்கள் மட்டும் குவித்து மறுபடியும் ஏமாற்றினார்.

இந்நிலையில் இது சம்பந்தமாக பேசிய பிரைன் லாரா கூறுகையில் : மகேந்திர சிங் தோனி பேட்டிங் ஆடவேண்டும் என்ற கட்டாயம் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இல்லை. அணியில் ஏற்கனவே திறமையான பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் உள்ளனர். அதிலும் குறிப்பாக பினிஷர் ரோலில் சாம் கரன் அற்புதமாக விளையாடி வருகிறார்.

எனவே தோனி இது குறித்து அதிகம் கவலை படத்தேவையில்லை என எனக்கு தோன்றுகிறது. தோனி தற்பொழுதும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். அவர் நேற்று அடித்த டைவ் அதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகும். தோனி தற்போது செய்யவேண்டியது எல்லாம் இழந்த அவருடைய பழைய ஃபார்மை கொண்டு வரவேண்டும். அப்படி வரும் பட்சத்தில் அவர் மீண்டும் அனைத்து தேவைப்படும் நேரங்களில் விளையாடுவார் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

Dhoni 1

பழைய ஆட்டங்களில் ஆடுவதுபோல் அவர் மீண்டும் ஆட ஆரம்பித்தால் ஒருகட்டத்தில் அது அனைத்து எதிர் அணிகளுக்கும் மிகப்பெரிய சிக்கலாக அமையும் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது என்று பிரைன் லாரா இறுதியாக கூறி முடித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அதனுடைய அடுத்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. நாளை அந்த போட்டி வான்கடே மைதானத்தில் இரவு ஆட்டமாக அமைய உள்ளது.

Advertisement