விராட் கோலியை வைத்து ரிஸ்வானை கிண்டலடித்த ஆஸி வீரர் ப்ராட் ஹோக்.. பாக் ரசிகர்கள் எதிர்ப்பு

Bradd Hogg
- Advertisement -

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி 2025 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் முகமது ரிஸ்வான் தலைமையில் சொந்த மண்ணில் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் லீக் சுற்றுடன் வெளியேறியது. முன்னதாக பாகிஸ்தான் வீரர்கள் களத்தில் அவ்வப்போது நகைச்சுவையை ஏற்படுத்தும் வகையில் ஃபீல்டிங் செய்வது வழக்கமாகும்.

அதன் உச்சமாக கடந்த 2023 உலகக் கோப்பையில் முகமது ரிஸ்வான் காயமடைந்தது போல் மைதானத்தில் விழுந்து நடித்ததை மறக்க முடியாது. அது பற்றி போட்டியின் முடிவில் கேட்டதற்கு சில நேரங்களில் அது காயம் சில நேரங்களில் அது நடிப்பு என்று ரிஸ்வான் சொன்னதையும் மறக்க முடியாது. அதனால் இவருக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் என்று ரசிகர்கள் கலாய்த்ததையும் மறக்க முடியவில்லை.

- Advertisement -

கலாய்த்த ஹோக்:

அதே போல முகமது ரிஸ்வான், பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தான் வீரர்கள் சரளமாக ஆங்கிலம் பேசத் தெரியாமல் பலமுறை நேரலையில் தடுமாறியுள்ளனர். தற்போது அதை கலாய்க்கும் வகையில் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹோக் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதாவது தனது யூடியூப் சேனல் வீடியோக்களை உருவாக்கும் நபர் லேசாக விராட் கோலி, முகமது ரிஸ்வான் சாயலில் உள்ளனர்.

அவரிடம் விராட் கோலி பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று முகமது ரிஸ்வான் பேசுவது போல் பேசி காண்பிக்குமாறு ப்ராட் ஹோக் கேட்க்கிறார். அதற்கு அந்த நபர் பேசியது பின்வருமாறு. “நானும் விராட் கோலியும் பார்க்க ஒரே மாதிரியாக இருப்போம். அவரும் தண்ணீர் குடிக்கிறார். நானும் தண்ணீர் குடிக்கிறேன். அவரும் சாப்பாடு சாப்பிடுகிறார். நானும் சாப்பாடு சாப்பிடுவேன்”

- Advertisement -

ரசிகர்கள் எதிர்ப்பு:

“நாங்கள் ஒரே மாதிரியாக இருப்போம். எந்த வித்தியாசமும் கிடையாது” என்று கூறினார். அது போக வெற்றி பெறுவதற்கு பாகிஸ்தானின் திட்டம் என்ன? என்று ஹோக் கேட்டதற்கு அந்த நபர் உளறலாக பதிலளித்தார். அது போக உங்களுடைய ஆங்கிலம் எப்படி இருக்கிறது? என்று கேட்டதற்கு அந்த நபர் “ஆம் பாகிஸ்தானில் அனைவரும் எனது ஆங்கிலம் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்” எனக் கூறினார்.

இதையும் படிங்க: 2010இல் சச்சினுக்கு பவுலிங் செய்வதை தோனி பேஸ்புக்ல சொன்னாரு.. பொல்லார்ட் விக்கெட் பற்றியும் அஸ்வின் பேட்டி

இந்த வீடியோவை விராட் கோலியின் – முகமது ரிஸ்வானும் சமம் என்ற தலைப்பில் ப்ராட் ஹோக் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜாலியாக பதிவிட்டுள்ளார். ஆனால் இதற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக எங்கள் நாட்டு வீரரின் ஆங்கிலம் பேசும் திறனை கிண்டலடிக்கலாமா என்று பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை சாடி வருகின்றனர்.

Advertisement