2010இல் சச்சினுக்கு பவுலிங் செய்வதை தோனி பேஸ்புக்ல சொன்னாரு.. பொல்லார்ட் விக்கெட் பற்றியும் அஸ்வின் பேட்டி

R Ashwin
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் வரும் 22ஆம் தேதி கொல்கத்தாவில் கோலாகலமாக துவங்குகிறது. அந்தத் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது. இந்த வருடம் அந்த அணிக்காக தமிழகத்தைச் சேர்ந்த நம்பிக்கை நட்சத்திரம் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 வருடங்கள் கழித்து மீண்டும் விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2009 முதல் 2015 வரை சென்னை அணிக்காக தோனி தலைமையில் விளையாடிய அஸ்வின் 2010, 2011 ஐபிஎல் கோப்பைகளை வெல்ல உதவினார். அதனால் ஹர்பஜன் சிங்கை கழற்றி விட்ட தோனி அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் வாய்ப்பை கொடுத்தார். அதைப் பயன்படுத்திய அஸ்வின் ஹர்பஜனை முந்தி 2வது அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்து சமீபத்தில் ஓய்வு பெற்றார்.

- Advertisement -

பேஸ்புக்கில் பேசிய தோனி:

தற்போது ஓய்வுக்கு பின் மீண்டும் தன்னுடைய சொந்த ஊரான சென்னைக்காக மகிழ்ச்சியாக விளையாட உள்ளதாக அஸ்வின் கூறியுள்ளார். மேலும் 2010 ஐபிஎல் தொடரில் சச்சினுக்கு எதிராக பவுலிங் செய்வதை பேஸ்புக் பக்கத்தில் தோனி தம்மிடம் தெரிவித்ததையும் அஸ்வின் பகிர்ந்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“அந்தக் காலங்களில் பேஸ்புக் சேட்டில் நாங்கள் பேசுவோம். அது இன்னும் எனக்கு நினைவிருக்கிறது. உங்களை அடுத்த வருடம் இன்னும் நன்றாக பயன்படுத்துவோம் என்று 2009இல் தோனி என்னிடம் சொன்னார். 2010 ஐபிஎல் துவங்கிய போது தோனி கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் காயத்தை சந்தித்திருந்தார். நானும் 2 – 3 போட்டிகளாக என்னுடைய ஃபார்மை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தேன்”

- Advertisement -

நினைவை பகிர்ந்த அஸ்வின்:

“பின்னர் நாங்கள் இருவருமே மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கம்பேக் கொடுத்தோம். அந்தப் போட்டியில் மும்பைக்கு எதிராக சச்சினுக்கு முன்னிலையில் முதல் முறையாக எனக்கு பவுலிங் செய்யும் வாய்ப்பை தோனி கொடுத்தார். அப்போது லேசான காயம் இருந்ததால் தோனி எனக்கு பெரிய ஆலோசனை எதுவும் சொல்லவில்லை. ஆனால் மைக் ஹசி என்னிடம் வந்து நீங்கள் பொல்லார்ட்டை அவுட் செய்ய முடியுமா? என்று கேட்டது நினைவிருக்கிறது”

இதையும் படிங்க: இந்த விஷயத்தை மாத்திகிட்டா மீண்டும் பிரித்வி ஷாவால் அசத்த முடியும் – ஷஷாங்க் சிங் கருத்து

“அப்போது பதற்றமடைந்த நான் பந்தை ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே வீசினேன். அதிர்ஷ்டவசமாக பொல்லார்ட் காற்றில் அடித்தார். அதைப் பிடிக்க திலன் துசாரா – முரளி விஜய் ஆகியோர் ஓடி வந்தனர். கடைசியில் அது மிகவும் வினோதமான கேட்ச்சாக அமைந்தது. ஏனெனில் அது துஷாராவின் கைகளில் பட்டு வெளியே வந்து மோதலை தவிர்ப்பதற்காக மூடிக்கொண்டு முயற்சித்த முரளி விஜய் கைகளில் விழுந்தது” என்று கூறினார்.

Advertisement