இந்த விதிமுறை மட்டும் இருந்திருந்தால் சச்சின் எப்போதோ 100 சதங்களை கடந்திருப்பார் – பிராட் ஹாக் கருத்து

sachin

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தினால் பல நாடுகள் தற்போது பயங்கர ஆபத்தை சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் தற்போது எண்ணிக்கையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 லட்சமாக அதிகரிக்கப்போகிறது. கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தற்போது தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து இருக்கிறது. அரசாங்கமும் தடுப்பு நடவடிக்கையாக மக்களை வெளியில் வர வெளியே வராத வகையில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு போட்டிகள், பொது நிகழ்ச்சிகள், அரசாங்க நிகழ்ச்சிகள் என அனைத்துமே ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதனால் இந்தியாவே தற்போது முடங்கி உள்ளது. மேலும் இந்த நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாமல் மக்கள் தனிமையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதே ஒரே வழி என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் தற்போது இந்த வேளையில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் கிரிக்கெட் குறித்த தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர்.

Sachin

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் ட்விட்டர் மூலமாக ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ரசிகர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிராட் ஹாக் சச்சின் குறித்து தனது கருத்தை கூறியுள்ளார். அதில் 1990களில் சச்சின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

- Advertisement -

மேலும் அப்பொழுது ரெவியூ சிஸ்டம் இல்லை என்ற காரணத்தினால் அவருக்கு பலமுறை தவறான அவுட்டுகள் கொடுக்கப்பட்டன. ஒருவேளை தற்போது இருக்கும் விதிமுறை போன்று அப்போது விதிமுறை இருந்திருந்தால் நிச்சயம் அவர் எப்போதோ 100 சதங்களை கடந்து இருப்பார். மேலும் 100 சதங்களை தாண்டியும் அவர் அடித்து இருப்பார்.

sachin50

ரெவியூசிஸ்டம் இல்லாத பலவீனம் காரணமாக சச்சின் தனது 100வது சதத்தை மிகவும் தாமதமாக அடித்தார் என்பதே எனது கருத்து என்று பதிலளித்துள்ளார். பிராட் ஹாக் இந்த கருத்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் பிராட் ஹாக் தொடர்ந்து இந்திய அணி வீரர்களுக்கு சப்போர்ட் செய்து தனது கருத்துக்களை கூறி வருவது குறிப்பிடத்தக்கது.