கொஞ்சம் கூட பொறுப்பில்லை. அவங்க 2 பேருக்கும் இனி வாய்ப்பு கிடைக்காது – விளாசிய பிராட் ஹாக்

Hogg
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருவது. இந்தத் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் தேர்வாகி இருந்த ராகுல் திவாதியா மற்றும் வருன் சக்ரவர்த்தி ஆகியோர் உடல் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்ததால் அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்தனர்.

indvseng

- Advertisement -

இந்நிலையில் அவர்கள் இருவரையும் கடுமையாக விமர்சித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடுவதற்கான போதிய ஃபிட்னஸ் தகுதி அவர்களிடத்தில் இல்லை. அதற்கு காரணம் சர்வதேச கிரிக்கெட் விளையாட அவர்களிடம் அர்ப்பணிப்பு என்பது அறவே இல்லை என்பதுதான். இதுவே அவர்களது கடைசி வாய்ப்பாக இருக்கலாம்.

இந்தியாவில் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்றுதான். வேலையோ, விளையாட்டோ எதுவாக இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். உங்களிடம் எதிர்பார்ப்பதை நீங்கள் சிறப்பாக செய்து காட்ட வேண்டும். இந்த வீரர்கள் இருவரும் தங்களது முதல் வாய்ப்பில்லையே அதை செய்ய தவறிவிட்டனர். மேலும் இதுவே அவர்களது கடைசி வாய்ப்பாக அமையலாம் என்று அவர்கள் இருவரையும் சாடியுள்ளார்.

varun 1

ஏற்கனவே கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்கரவர்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் தேர்வானார். ஆனால் அப்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இடம்பெறாத வருன் சக்ரவர்த்தி மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பிடித்தார். இப்போது காயம் சரி ஆனாலும் உடல் தகுதித் தேர்வை அவர் நிரூபிக்க தவறி விட்டார் இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tewatia

மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திவாதியா இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த தொடரில் இடம் பிடித்திருந்தார். இவரும் யோ-யோ டெஸ்டில் தோல்வி அடைந்தது மூலம் இந்த வாய்ப்பை அவர் தவற விட்டுள்ளார். இந்திய அணி எப்போதும் ஃபிட்னஸ்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது நாம் அறிந்ததே. மேலும் வருண் சக்கரவர்த்தி விஷயத்திலும் எந்த சமரசமும் கிடையாது. இந்திய அணிக்கு தேர்வாக ஃபிட்னஸ் அவசியமானது என்று கோலி நேரடியாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement