யார் சொன்னாங்க கோலி பார்ம் அவுட்ன்னு. சீக்கிரமே அவரோட ஸ்பெஷல பாப்பீங்க – பிராட் ஹாக் கருத்து

Hogg

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார். ஒவ்வொரு முறையும் விராட் கோலி மைதானத்தில் வந்து விளையாடும் போதும் சதம் அடிப்பார் என்று ரசிகர்கள் தற்போது வரை காத்திருக்கின்றனர். கடைசியாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய கோலி அதற்குப்பிறகு 51 இன்னிங்ஸ்களில் (மூன்று வகையான கிரிக்கெட்) விளையாடி உள்ளார்.

kohli century

ஆனால் இதுவரை அவர் சதம் விளாசவில்லை. இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆவது அவர் சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல் மூன்று போட்டிகள் முடிந்த நிலையில் இன்னும் அவர் சதம் அடிக்கவில்லை. இந்நிலையில் விராட்கோலி நிச்சயம் விரைவில் சதம் அடித்து ரசிகர்களை மகிழ்விப்பார் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில் : விராட் கோலி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது மூன்றாவது நாள் மற்றும் நான்காவது நாளில் தனது சிறப்பான பேட்டிங் டெக்னிக்கை வெளிக்காட்டினார். அவர் சதம் அடிக்கவில்லை என்றாலும் அந்த போட்டியில் அரைசதம் அடித்து தனது பேட்டிங் பார்மை நிரூபித்துள்ளார்.

kohli rahane

இந்த மூன்றாவது மற்றும் நான்காவது நாள் ஆட்டத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்தேன். 2 ஆண்டுகளுக்கு முன்னர் கோலியிடம் நான் பார்த்த பேட்டிங் டெக்னிக்கை அந்த 2 நாளிலும் பார்த்தேன். அவரது பேட்டிங்கில் நல்ல டெக்னிக் உள்ளது. நிச்சயம் அவர் விரைவில் சதம் அடிப்பார் அவர் சதம் அடிக்கும் நேரம் வெகு தூரம் இல்லை. விரைவாகவே அவர் சதம் அடித்து ரசிகர்களை மகிழ்விப்பார் என அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Advertisement